தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juli 2013

கொழும்பில் பொலிஸ் மற்றும் ஆயுதக் குழு மோதல் வெடித்தது !

கொழும்பு கல்கிசை பகுதியில், பொலிசாருக்கும் மற்றும் ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது என அறியப்படுகிறது. போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல் ஒன்று ஹுலுதுகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட அந்த வீட்டை பொலிசார் இன்று சுற்றிவளைத்தார்கள். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் மீது கடத்தல்காரார்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். இதனையடுத்து பொலிசாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் குறிப்பிட்ட அப் பகுதியில் பதற்றம் நிலவியது எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இறுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து வீட்டினுள் புகுந்த பொலிசார் அக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை கைதுசெய்துள்ளார்கள். இருப்பினும் சிலர் தப்பிச் சென்றுவிட்டதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் சில மேலும் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten