பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகையில்தான், ஸ்னோடன் வெளியிட்ட முதல் ரகசியம் வெளியானது. ஹாங்காங்கில் இருந்த ஸ்னோடனை இரு தினங்களாக பேட்டிகண்டு அதை வெளியிட்டவர், க்ளென் கிரீன்வால்ட். இவர் தற்போது ஆர்ஜென்டீனா நாட்டின், ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ளார். ரியோவில் இருந்து, ஜெர்மன் டி.வி. சேனல் ஏ.ஆர்.டி.க்கு பேட்டியளித்த இவர், “அமெரிக்கர்கள் மட்டுமன்றி, மற்றைய நாட்டவர்களுடைய போன், இன்டர்நெட் தொடர்புகளை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்தது என்ற ரகசியத்தை ஸ்னோடன் முதலில் ஆதாரங்களுடன் வெளியிட்டபோது, உலகம் எங்கும் எப்படி அதிர்ச்சி ஏற்பட்டதோ, அதைவிட பெரிய அதிர்ச்சி இந்த இரண்டாவது ரகசியத்தை வெளியிடும்போது ஏற்படும்” என்றார்.
“இந்த ரகசியம் வெளியிடப்படும் என்ற விஷயத்தை ஸ்னோடன் உங்களிடம் எப்போது சொன்னார்? அவரை கடைசியாக நீங்கள் எப்போது தொடர்பு கொண்டீர்கள்?” என்று ஜெர்மன் டி.வி.யில் இருந்து கேள்வி எழுந்தது.
“இந்த பேட்டி நேரடி ஒளிபரப்பாவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னர், ஸ்னோடன் என்னுடன் தொடர்பில் இருந்தார்” என்றார், க்ளென் கிரீன்வால்ட்.இந்த இரண்டாவது ரகசியம் பற்றிய ஆவணங்களை ஸ்னோடன், கிரீன்வால்டிடம் கொடுத்து விட்டதாகவும், அதில் 9 முதல் 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய அதி ரகசிய விபரங்கள் உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. இந்த ஆவணத்துடன் கிரீன்வால்ட் அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ தங்கியிருந்தால், அவருக்கு சிக்கல் ஏற்படலாம் என்பதற்காகவே, அவர் தென்னமெரிக்காவில் உள்ள ஆர்ஜென்டீனா நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. (பிரிட்டிஷ் பத்திரிகை கார்டியனில் எழுதும் கிரீன்வால்ட், பிரிட்டிஷ்காரர் அல்ல, நியூயார்க்கில் பிறந்த அமெரிக்கர்.)
அனேகமாக இந்த ரகசியமும் கார்டியன் பத்திரிகையிலேயே வெளியாகும் என்பதால், கார்டியன் பத்திரிகையின் பல ஊழியர்கள் ரகசியமாக கண்காணிக்கப்படலாம். ஒவ்வொரு நாளும் கார்டியன் பத்திரிகையில் என்ன பிரின்ட் ஆகிறது என்ற விபரமும், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளால் கண்காணிக்கப்படலாம். இதற்குள், ரஷ்யா – மாஸ்கோ விமான நிலையத்தில் உள்ள சோர்ஸ் ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ள வாய்ஸ் ஆஃப் ரஷ்யா ரேடியோ, மாஸ்கோ ஏர்போர்ட் ட்ரான்சிட் ஏரியாவில் உள்ள ஹோட்டலில் ஸ்னோடனின் பெயரில் ஒரு ரூம் நிரந்தரமாக புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
ஆனால், அந்த ரூமில் அவர் தங்குவதில்லை என்றும், ஏர்போர்ட் டூட்டி உயர் அதிகாரிக்கான சிறப்பு ரெஸ்ட் ரூம் ஒன்றிலேயே ஸ்னோடன் தங்கியுள்ளார் என்றும் கூறுகிறது, வாய்ஸ் ஆஃப் ரஷ்யா.
Geen opmerkingen:
Een reactie posten