தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன!– வாசுதேவ நாணயக்கார!

பிரித்தானிய பிரஜை தொடர்பான செய்திக்கு இலங்கை வெளியுறவு அமைச்சு கண்டனம்
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:41.18 AM GMT ]
மாத்தறை மாவட்டத்தில், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதியன்று தங்காலை ஹோட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டதாக கூறப்படும் விமர்சனத்தை இலங்கையின் வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது.
அவ்வாறு வெளியிடப்பட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து முற்றிலும் அடிப்படையற்றது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
எனினும் பிரித்தானிய பிரஜையின் விசாரணைகளின் தாமதம் குறித்து தாம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்போவதாக தற்போது இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டன்சுக் இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னர் வெளியிட்டதாக கூறப்படும் செய்தி தொடர்பிலேயே இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதேவேளை தற்போது இலஙகை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை ஜனாதிபதியை சந்திப்பதற்கான எவ்வித நேர அட்டவணைகளும் இல்லை என்பதையும் இலங்கையின் வெளியுறவு அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன!– வாசுதேவ நாணயக்கார
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:33.46 AM GMT ]
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இனங்கள் மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் தீவை மூட்டும் கும்பல்கள் இந்த உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளன.
அவ்வாறு இலங்கையிலும் சில தரப்பினர் இனங்ளுக்கு இடையில் தீயை மூட்ட முற்சிக்கின்றன.
அவற்றை அணைக்கும் தரப்பாகவே நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அனைத்து இன மக்களும் ஒரே விதமாக நடத்தப்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது.
அரச நிர்வாக சேவைகளை வழங்கும் தராதரம் பாராது அனைவருக்கும் ஒரே விதமான சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
ஒரு இன சமூகம் மற்றுமொரு இன சமூகத்தை விடவும் தாழ்ந்தது அல்லது உயர்ந்தது எனக் கருதுவது முரண்பாடுகளையே உருவாக்கும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten