[ புதன்கிழமை, 03 யூலை 2013, 05:44.05 AM GMT ]
முல்லேரியா படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கின் சந்தேகநபர்களான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அதிரடிப்படைவீரர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி முல்லேரியா ராஹுல வித்தியாலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது, அப்பகுதிக்கு டிபென்டர் ரக வாகனமொன்று வந்தது. அதில் துமிந்த சில்வாவும் இருந்தார். கைத்துப்பாக்கிகள் மற்றும் ரீ– 56 ரக துப்பாக்கிகள் போன்றன பலரதும் கைகளில் இருந்தன என தெரிவித்தார்.
அப்போது, அப்பகுதியிலிருந்த பெண்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதன்போதே, பாரத லக்ஸ்மன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துமிந்த சில்வா, தன்னைத் தானேயும் சுட்டுக்கொண்டார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதை நான் செவிமடுத்தேன்' என கூறினார்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நானே புத்தர் சிலையை வைத்தேன்: வாழைச்சேனை விகாரதிபதி
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 05:24.03 AM GMT ]
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னிடம் மத வேறுபாடுகளோ சதி வோறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.
1960ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி வி.ஜேமிஸ் அபுகாமி என்பவர் புத்த ஜயந்தி விகாரைக்கு இரண்டு ஏக்கரும், பதினேழு பேர்ச் அடங்கலான காணியை அன்பளிப்புச் செய்திருந்தார்.
கடந்த யுத்த காலத்தின் போது விகாரையின் காணிகளை முறையாக பராமரிக்க முடியாமல் போன காரணத்தினால் சிலர் விகாரையின் காணிகள் பிடித்து கொண்டனர். தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படும் காணி அடங்களாக இரண்டு ஏக்கருக்கும் குறைவாக காணியே உள்ளது.
இந்த காணி விவகாரம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றில் வழங்கு நடைபெற்ற போது தனக்கு தமிழ் தெரியாது என்றும், இந்த வழக்குத் தொடர்பாக தமிழில் எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்காமல் சிங்களத்தில் மொழி பெயர்த்து அனுப்புமாறும் எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் என்ன நடைபெற்றுள்ளது என்று இதுவரை எனக்கு எதுவும் தெரியாது.
தீர்ப்புக் கிடைத்து விட்டது என்று பாடசாலை நிருவாகமோ வேறு எவருமோ என்னிடம் கூறவில்லை.இது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாடாக எவரும் கருதக் கூடாது. புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியை மீட்கும் போராட்டமே இது என நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அபிவிருத்திக் குழு செயலாளர் எஸ்.எம்.செயினுதீனை கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த மைதானக் காணி தொடர்பாக வாழைச்சேனை காவற்துறையில் செய்த முறைப்பாட்டுக் அமைவாக, காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு அமைய நீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக விகாரையின் நிர்வாகம் அத்துமீறி அக்காணியில் புத்தர் சிலை வைத்துள்ளது.
பாடசாலை நிருவாகத்தை சிவில் வழக்கு தாக்கல் செய்யும் படி கூறியதற்கிணங்க சட்டத்தரணிகளுடன் சிவில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten