யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி ரத்து!- யாழில் 41வது இலக்கியச் சந்திப்பு நாளை மறுதினம் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:40.46 AM GMT ]
ஏற்கெனவே தமிழ்க் கலை இலக்கியப்பேரவை சார்பில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) யாழ்ப்பாணத்திற்கு புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையை வரவேற்று தமிழின உணர்வாளர்கள் இணையதளங்களில் கடிதங்கள், கருத்துகள் எழுதினார்கள்.
இந்நிலையில் பபாசி “புத்தகக் கண்காட்சி நடத்துவதை ரத்து’’ செய்ததை தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வரவேற்கிறது. பாராட்டுகிறது. இவ்வாறு தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கூறியுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
யாழில் 41வது இலக்கியச் சந்திப்பு நாளை மறுதினம் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் 41 வது இலக்கியச் சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள யூரோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதிகாரத்திற்கும் அத்துமீறல்களுக்கும் எதிரானதாக தொடர்ச்சியாக 25 வருடங்களுக்களாக இலக்கியவாதிகள் குரல்கொடுத்து வருகின்றார்கள் என இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் அ.தேவராஜா தெரிவித்தார்.
41வது இலக்கியச் சந்திப்பில் பேச மறைக்கப்படும் விடயங்கள், பேச மறுக்கப்படும் விடயங்கள், பேசாமல் மறைக்கப்பட்ட விடயங்கள் போன்றவற்றை ஒரு அரங்கில் இருந்து வாதப் பிரதி வாதங்கள் ஊடாக ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்வாக நடாத்த உள்ளதாக குறிப்பிட்டார்.
41வது இலக்கியச் சந்திப்பில் இலக்கியம், அரசியல், சாதியம், பெண்ணியம், அடங்கலாக பல விடயங்கள் பேசப்படவுள்ளதாக குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் அ.தேவராஜா அதற்கமைவாகவே நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நாளை மறுதின ஆரம்ப நாள் நிகழ்வானது ரெங்கன் தேவராஜன் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு அறிமுகத்துடன் ஆரம்பமாகி ஐயாத்துரை சாந்தன் எழுதிய என் எழுத்து என்னும் நூல் பற்றிய பார்வையும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பாரம்பரிய கலைகளும், பண்பாடும் என்னும் தலைப்பில் எம். எஸ். தேவகௌரி, முஸ்லீம்களின் பாரம்பரிய கலைகள் பற்றிய சில கூறுகள் குறித்து எம். எஸ். எம். அனஸ், பெண்களும் ஆன்மீக ரீதியிலான கலாசாரமும் என்னும் தலைப்பில் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், அசன்பே சரித்திரத்தின் வரலாற்று விடுபடலும் முஸ்லிம் தேசிய இலக்கிய மரபின் தனித்துவமும் குறித்து எம். நவாஸ் சௌபி, மட்டக்களப்புப் பாரம்பரிய கலாச்சாரப் பண்புகள் என்னும் தலைப்பு பற்றி எஸ். தெய்வநாயகம், முஸ்லிம் பண்பாட்டுருவாக்கங்களும் அண்மைக்கால நெருக்கடிகளும் குறித்து ஏ.பி.எம்.இத்ரீஸ் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
தொடர்ச்சியாக பாரம்பரிய கலைகளும், பண்பாடும் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 'பள்ளிக்கூடம்' என்னும் நூல் அறிமுகத்தினை கந்தசாமி சுரேஷ்குமார் - மகேந்திரன் திருவரங்கன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
மேலும் 41வது இலக்கியச் சந்திப்பு அடையாள மலரான குவர்னிகா என்னும் மலர் வெளியீடு இடம்பெறவுள்ளன. நாளை மறுதினம் ஆரம்பமாகும் இலக்கியச் சந்திப்பில் 'மண்சோறு என்னும் குறும்படக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேலும் “நான் ஏன் எழுதுகிறேன்” என்ற தலைப்பில் விஜயலட்சுமி சேகரின் உரையும், தொடர்ச்சியாக சாதியம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் சாதியம் குறித்து தெணியானும், மட்டக்களப்புச் சாதி அமைப்பும் அதன் இன்றைய நிலையும் குறித்து குமாரசாமி சண்முகமும் விளக்கவுள்ளனர்.
நிகழ்வில் தொடர்ந்து தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து அகல்யா பிரான்சிஸ் கிளைன் பேசவுள்ளார்.
அத்துடன் கல்வியும் சாதிய ஒடுக்குமுறையும் குறித்து ஏ. சீ. ஜோர்ஜ் உம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் குறித்து சீனியர் குணநாயகமும் உரையாற்றவுள்ளனர்.
அன்றைய தினம் வேலணையூர் தாஸ் தலைமையில் கவிதா நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மாலை குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பில் பல்வேறுபட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
யாழில் கடைகள் உடைக்கப்பட்டு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை!- உண்டியல் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:44.18 AM GMT ]
நேற்றிரவு இந்தக் கடைகள் யாவும் உடைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் பாதுகாப்பு மிகுந்த இந்த பகுதியில் மேலும் 5 கடைகள் உடைக்கப்பட்டுள்ள அதேவேளை உடைக்கப்பட்ட கடைகளிலிருந்து பொருட்களை திருடர்களால் கொண்டு செல்ல முடியாமல் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபாதை வியாரிகள் ஒரு நாள் அடையாள கடையடைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் யாழ்.நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் உண்டியல் திருடிய நபர் பொதுமக்களால் மடிக்கிபிடிப்பு
கோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாழங்குடா மதுராபுரம் கிராமத்திலுள்ள காளிகோவில் உண்டியலை திருடியதாக கூறப்படும் நபரே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இவ் ஆலயத்தின் உண்டியல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை காரணமானவர் என நம்பப்படும் மேற்படி நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் அழகையா சந்திரன் என்னும் புதுக்குடிருப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் இருந்து ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten