[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 10:01.43 AM GMT ]
நடத்தப்பட உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில், இரண்டு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப்பெறாது என்ற புலனாய்வு பிரிவுகளின் தகவல்களை அடுத்து, எப்படியாவது தேர்தலில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் அரசாங்கம், பாரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் இலஞ்சமாக பணம் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ அரசாங்கம் அந்த சட்டத்தில் புகுந்து செல்வதற்காக தேசத்திற்கு மகுடத்தை பயன்படுத்தி வருகிறது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் மாசாரீ மாவபா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கைகளை போல், வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலிலும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமேல் மாகாண சபைக்குரிய குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ தொகுதிக்கு மாத்திரம் அரசாங்கம் 280 கோடி ரூபாவை தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் அரசாங்கம் வழங்கியுள்ளது. ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்காக மாத்திரம் 40 லட்சம் ரூபா முதல் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர மாகாண உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள பணத்தை கிராம சேவகரகள் மற்றும் அரச அதிகாரிகள் மூலம் வாக்காளர்களை திரட்டி இலஞ்சம் வழங்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிராமங்கள், பிரதேசங்கள் பிரித்து பணத்தை செலவிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால், மத்திய மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற இரண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கம் தோல்வியடையும் என்று புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சந்திர வாகிஸ்ட், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கிய இரகசிய அறிக்கையே இதற்கு காரணம் என தெரியவருகிறது.
புலனாய்வு பிரிவின் அறிக்கையின் படி வடக்கில் எதிர்க்கட்சிகளுக்கு 90 வீதமான ஆதரவும், மத்திய மாகாணத்தில் 70 வீதமான ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 09:29.30 AM GMT ]
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் அவர் இலங்கை சென்றுள்ளதாக பொதுநலவாய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மாநட்டின் ஏற்பாட்டுக் குழுவினர் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்தித்து மாநாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் பயிற்சிகள் வழங்கும் நிகழ்வொன்றிலும் மாசாரீ மாவபா கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten