தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 juli 2013

நல்லிணக்கத்திற்குப் பதிலாக அரசாங்கம் பிரிவினையை வலுப்படுத்துகிறது: யாழில் சரத் பொன்சேகா!

வடக்கில் முறைகேடான வாக்களிப்புக்கு இராணுவம் முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 10:46.29 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தல் பற்றி சகலதரப்பாலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் சீருடை தரித்தோர்,  கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணப் பகுதியில் பரவலாக மக்களிடம் வாக்காளர் விபரங்களைத் திரட்டி வருகின்றனர்.
வடக்கில் படையினரால் புதிதாக உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு பணியாளர்களுடையதும் அவர்களது குடும்பத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய அங்கத்தவர்களதும் விபரங்கள் அச்சடிக்கப்பட்ட படிவங்களை விநியோகித்து ஆயுத முனையில் சேகரிக்கப்படுகின்றன.
மக்கள் தங்களுக்கேயான ஜனநாயக ஆட்சிமுறையினைச் சுதந்திரமான முறையில் தெரிவு செய்யும் உரிமையினை தட்டிப்பறிக்கும் செயல்களில் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமையினை மீறும் செயலாகவே இது எல்லோராலும் கருதப்படுகிறது.
இது ஜனநாயகத்துக்கு விடப்படும் ஒரு அச்சுறுத்தலாகும். சீருடை தரித்தோரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்பாடானது நடைபெறப்போகும் வட மாகாண சபைத் தேர்தலில் முறைகேடான வகையில் வெற்றியினைப் பெறுவதற்கு ஆளும் தரப்பு முற்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.


நல்லிணக்கத்திற்குப் பதிலாக அரசாங்கம் பிரிவினையை வலுப்படுத்துகிறது: யாழில் சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 12:15.56 PM GMT ]
வட-கிழக்கு மாகாணங்களில் ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்து நான்கு வருடங்களாகின்ற போதிலும் தமிழர்கள் எவ்வித நன்மையினையும் அடையவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிரிவினையினை அரசு வலுப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ்.ஊடக அமையத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்தை தோற்கடிக்கப் போவதாகவும், மக்களை தனக்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.
மேலும், 13ம் திருத்தச் சட்டம், மாகாணசபை, பொலிஸ், காணி அதிகாரங்கள் என போகும் இடமெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் 13ம் திருத்தச் சட்டமென்பது ஒரு நீர்த்துப்போன விடயம் எனவும், அதற்கு மாற்றாக அரசியலமைப்பு ஒன்று உ ருவாக்கப்பட வேண்டும்.
அதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறமை ஒழிக்கப்படவேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ளதாலேயே ஜனாதிபதி மகிந்த தனது அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பில் சகல இனங்களுக்கும் சுதந்திரமும், சமவுரிமையும் வழங்கப்பட வேண்டும், அதன் மூலம் அனைத்து இனங்களினதும் தனித்துவங்கள் பாதுகாக்கப்படும் என கூறினார்.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு அரசியல்வாதிகளால் ஆட்டுவிக்கப்படுகின்றது என்பதை விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கள் முக்கியஸ்தர்கள் தேர்தலில் போரட்டியிடுவதன் மூலம் அறிய முடிகின்றது.
சரணடைந்தவர்கள் சட்டத்தின் மூன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு தமக்கு சாதகமானவர்கள் எதுவுமில்லாமல் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
சாதாரண போராளிகள் சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இதுதான் நிலை இனங்களுக் கிடையில் நல்லிணக்கம் வளர்ப்பதற்கான எந்தத் திட்டமும் இந்த அரசிடம் கிடையாது. மாறாக 13வதில் திருத்தம் எனக் கூறிக்கொண்டு இனங்களுக்கிடையில் பிரிவினையினை வளர்க்கின்றது. என்றார்.



Geen opmerkingen:

Een reactie posten