[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 08:26.59 AM GMT ]
65 வயதான தோட்ட நூரி தோட்ட முகாமையாளரே இவ்வாறு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த முகாமையாளரின் காவலாளிகள் மூன்று பேர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அவர்கள் தெரணியகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத கும்பலொன்று இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடாத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரம் செறிந்த நாளில் தேர்தல் அறிவிப்பு! செப்டம்பர் 21ல் ஐந்து முனைகளில் தாக்குதல்!- எம்.எம் ரதன்
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 08:56.20 AM GMT ]
....இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நகரசபையின் பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தெரிவித்தார்.
நாகர் இலுப்பைக்குளத்தில் இன்றுகாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு அக்கினி விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ். சுதர்சன் தலைமை தாங்கினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன்,
இலங்கையில் காணப்படும் ஒன்பது மாகாணங்களுக்குள் வடமாகாணமே ஜனநாயகம் இன்றி செத்து செயலிழந்து இருக்கின்றது. 1989 ம் ஆண்டிற்குப் பின் இம்மாகாணத்தில் அரசாங்கம் தேர்தல் நடாத்தவில்லை. இதற்கு அரசாங்கம் பல காரணங்களைக் கூறியது.
காரணம் இம் மாகாணத்தில் தேர்தல் நடாத்தினால் படுதோல்வியை சந்திப்போம் என்பதனால் ஆகும். விமல் வீரவம்ச, சம்பிக்க ரணவக்க போன்றோர்கள் இனவாதம் பேசி எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முற்பட்டனர் என்பதை யாவரும் அறிவர்.
இன்றைய தினம் ஜனாதிபதியால் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோக பூர்வமாக எமது மாகாணங்களுக்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட சூழ்நிலையில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா தெளிவான அறிவிப்பை வெளியிடுவர்.
அதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயகப் போராளிகளாகிய நாம் இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த அரசாங்கத்திற்கும் அதன் அருவருடிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவோம். இதற்கு மக்களாகிய நீங்கள் தயாராக வேண்டும்.
அறுபது வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்ற நாம் ஆரம்பத்தில் ஜனநாயக வழியிலும் அதன் பின்பு உன்னதம் வாய்ந்த முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்திலும் எமக்கான விடுதலையைநோக்கி நகர்ந்திருக்கின்றோம்.
2009ம் ஆண்டு மே 19ம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆயுதவழியிலான போராட்டம் முடக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது எமக்கிருப்பது வாக்கு என்ற ஆயுதபலமே. இதனை செப்டம்பர் 21 ல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், ஆகிய மாவட்டங்களில் வாழும் தன்மானத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பல்குழல் பீரங்கிகளாக மாறி தாக்குதல் நடாத்த வேண்டும்.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு முன்னர் எமது தாயகத்தில் தோற்றம் பெறாத சங்கங்களும் சபைகளும் அரசியல் குழுக்களும், அரசியல் நபர்களும் இன்று அரசாங்கத்தின் ஆதரவோடு மழைகாலத்தில் புற்றுக்குள் இருந்து முளைக்கும் காளான்களைப் போல் முளைத்து தேசியம் பேசுவோர் ஒருபுறம், அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டுவோர் இன்னுமொரு புறம்.
கடந்த காலங்களில் வடகிழக்கு இணைந்த எமது தாயகத்தின் விடுதலைக்குள் போராடி வீழ்ந்த வீரமறவர்களதும் பொதுமக்களதும் தியாகங்கள் இன்னும் வீண் போகவில்லை என்ற நிலைப்பாட்டில் இத்தேர்தலை எமது இறுதித் தீர்வாக இல்லாவிட்டாலும் எமது விடுதலைக்கான ஒரு படியாகக் கருதி வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten