தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

13வது திருத்தம்!- இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது!- கோத்தபாய!

தேசப்பற்றுடைய நாட்டுத் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளது!– சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 03:15.43 PM GMT ]
தேசப்பற்றுடைய நாட்டுத் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் எதிர்க்கின்றோம். அதிகாரிகள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் போரை வென்றெடுக்க முயற்சித்தனர்.
இரண்டு வாரத்தில் போரை முடிப்பதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார்.
பல்குழல் எறிகணை, பீரங்கி என பல்வேறு ஆயுதங்களை தருவித்து சந்திரிக்கா போர் நடத்தினார்.
மிக், கிபீர் விமானங்கள் வாங்கப்பட்டன. எனினும் போர் வென்றெடுக்கப்பட்டதா?
இராணுவத்தின் உளநிலையை மேம்படுத்த பாதுகாப்புச் செயலாளர்களினால் முடியாது. அவ்வாறு குறிப்பிடுவதனால் நிதி அமைச்சின் செயலாளருக்கும் போர் வெற்றியின் கௌரவம் செல்ல வேண்டும்.
அந்தப் பணியை இராணுவத் தளபதி ஒருவரே செய்ய வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டு போர் செய்ய முடியாது. போர்க் களத்திற்கு சென்று போராட வேண்டும்.
உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களுக்கே போர் வெற்றியின் பெருமை சென்றடைய வேண்டும்.
அரசியல் அமைப்பின் ஒவ்வொரு பகுதிகளை திருத்தம் செய்யாது ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையே மாற்றியமைக்க வேண்டும்.
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டவசமான நிலைமைக்கு நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் பொறுப்பு சொல்ல வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

13வது திருத்தம்!- இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது!- கோத்தபாய
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:12.45 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், இலங்கையர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவினால் அல்ல. தேசியப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு ஒன்றே காணப்பட வேண்டும்.
13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காது. இந்தியா எமது நண்பன். தொடர்ந்தும் நல்ல உறவுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இது எமது உறவுகளைப் பாதிக்கும் ஒரு விவகாரமாக இருக்கக்கூடாது. இதனை இந்தியா புரிந்து கொள்ளும் என்பது எனது கருத்து.
இது இலங்கையர்களின் விவகாரம் என்று இந்தியா விளங்கிக் கொள்ள வேண்டும்.நாமே இதனைத் தீர்க்க வேண்டியுள்ளது.
இன அடிப்படையிலான மாகாணங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. இது தீர்வு அல்ல, இது தோல்வியடைந்து விட்டது.
தமிழர்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கிறார்கள், முஸ்லிம்களும் கூட.
எனவே அவர்களின் பிரச்சினையை மாகாணசபைகள் எவ்வாறு தீர்க்க முடியும்?
நிர்வாகத்தை பரவலாக்குவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், இன, மத, மொழி, சாதி அடிப்படையில் அது இடம்பெறுவதில் நம்பிக்கையில்லை.
இந்த நாடு எல்லா இலங்கையர்களுக்கும் உரியது, அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten