[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 02:13.51 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் உள்ளக அமைப்பின் செயலாளர் கால் ரைட், இது தொடாபில் லண்டன் பைனான்சியல் டைம்ஸில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் பின்னர், தேவையான முன்னேற்றங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையிலேயே கால் அவர்களின் வலியுறுத்தல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் ஜனநாயக ஆட்சி குறித்து திருப்தி அடைய முடியாது: அமைச்சர் வாசுதேவ
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 02:32.51 AM GMT ]
அரசாங்கத்தின் ஜனநாயக ஆட்சி குறித்து திருப்தி அடைய முடியாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலணித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதன் காரணமாகவே இந்த அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றேன்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலகிடுவேன்.
நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி கூறி பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்களில் சிலரே இன்று அரசியல் அமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோருகின்றனர். மாகாணசபை முறைமையை இந்த அரசாங்கம் ரத்து செய்யாது.
அதனை புரிந்து கொண்ட காரணத்தினால்தான் நான் அவ்வாறு ரத்து செய்தால் பதவி விலகுவதாக அறிவித்திருக்கின்றேன் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten