[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 03:17.47 AM GMT ]
வலி.கிழக்கின் அக்கரை கிராம கடற்கரையோரங்களில் இராணுவத்தினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இராணுவத்தினர் என்னத்தையும் கொண்டு போகலாம் என்ற நிலையினை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டவிரோத மணல் அகழ்வினை பொலிஸாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இப்பகுதி நீண்ட காலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீள்குடியேற்றத்திற்காக அந்த பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மிதிவெடி உள்ளதாக மக்கள் அச்சங் கொண்டிருந்ததால் முழுமையாக அப்பகுதியை கண்ணிவெடியகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததோடு, அயல் கிராமங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
பொது மக்களது உழவு இயந்திரங்களைப் பாவித்து இராணுவத்தினர் மணல் அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.
மணல் அள்ளப்படுவதற்குரிய எந்த அனுமதிகளும் உரியவாறு எடுக்கப்படவில்லை. கடற்கரையிலுள்ள இந்த மணலானது அகழ்ந்து எடுக்கப்படுவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதனைப் பொது மக்கள் கேட்டபோது, பிரிகேடியரிடம் கேளுங்கள் அல்லது இராணுவத் தலைமையத்திடம் கேளுங்கள் என்ற பதில்கள் சொல்லப்படுகின்றது.
இராணுவத்தினர் தமக்கான புதிய முகாம்கள் அமைப்பதற்கும் புதிய பல விடயங்களைச் செய்வதற்கும் இந்த மணலைப் பாவிக்கின்றனர்.
இராணுவத்தினர் அடிக்கும் மணல் கொள்ளைக்கு இணையாக உழவு இயந்திரங்களை இராணுவத்திற்கு வழங்குபவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.
அகழ்ந்த மணலை இராணுவம் கொண்டு செல்கின்றது என்று பொலிஸாரும் கண்டு கொள்வதில்லை என்றார்.
இந்தியத் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம்: பொதுபலசேனா ஏற்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 03:44.23 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிக்குமார்கள் மற்றும் பொதுபல சேனாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலங்கையின் அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten