[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 01:42.18 PM GMT ]
கிழக்கு மாகாணத்தில் வார இறுதியில் நான் மேற்கொண்டிருந்த விஜயத்தையும் மக்கள் சந்திப்புக்களையும் குழப்புவதற்கும் தடுப்பதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் அவரது அரசு சார்ந்த சகாக்கள் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.
அவற்றை எல்லாம் மீறி எனது கிழக்கு மாகாண விஜயம் நான் எதிர்ப்பார்க்காத அளவு வெற்றியையும் திருப்தியையும் அளித்துள்ளது. இந்த விஜயம் கிழக்கு மாகாண அரசியலின் அண்மைக்கால வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டது.
இந்த விஜயம் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் சிந்தனையில் பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. எனது விஜயத்தின் இந்த அளவு வெற்றிக்கும், அது கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் காரணமாக இருந்த மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உட்பட அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓட்டமாவடியிலும், கிண்ணியாவிலும் நான் நடத்திய மக்கள் சந்திப்புக்களை குழப்பி நிறுத்த முதலமைச்சரை அரசு ஏவி விட்டிருந்தது. அவர் தனது சகாக்களை ஏவிவிட்டிருந்தார். இரண்டு இடங்களிலும் அவர்களின் முயற்சி பிசுபிசுத்துப் போனது.
இவ்விரு இடங்களிலும் மக்கள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் என்பனவற்றை எல்லாம் மீறி பெருந்திரளாக வந்து எனது கூட்டங்களில் பங்கேற்றனர். கிழக்கு மாகாண முதலமைச்சாரால் அவரது சொந்த ஊரில் நடந்த கூட்டத்தைக் கூட தனது அதிகார பலம், படைபலம் என்பனவற்றை எல்லாம் இயலுமான வரை பயன்படுத்தியும் கூட தடுக்க முடியாமல் போனது என்பது தான் உண்மை.
கிண்ணியா பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு யுத்த பிரதேசம் போல் ஆக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து மக்களை யுத்த பீதியிலேயே வைத்திருக்க முயல்கின்றது என்பதை இது மீண்டும் நிரூபிப்தாக அமைந்துவிட்டது.
கிழக்கில் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கின்றார் என்றால் அரசு ஏன் எனது விஜயத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? அந்த முதலமைச்சர் ஏன் என் வருகையைக் கேள்வியுற்று நீண்ட உறக்கத்தில் இருந்து விடுபட்டு அஞ்சி நடுங்க வேண்டும்?
தனது வாழ்நாளின் மிக நீண்ட பகுதியை உறக்கத்தில் கழித்தவர் இன்னும் கழித்துக் கொண்டிருப்பவர் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பதை பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அவரது பிரதேச மக்கள் அதனை நன்கு அறிவார்கள்.
ஆனால் கடந்த ஓரிரு தினங்களாக எனது கூட்டங்களை குழப்ப அவர் தனக்கு மிகவும் விருப்பமான உறக்கத்தை கூட தியாகம் செய்து பணியாற்றியதாக நான் கேள்வி பட்டேன். அவரது பிரதேச மக்கள் தான் இதை என்னிடம் கூறினார்கள்.
என்னுடைய விஜயத்தால் அவர் சுறுசுறுப்பு அடைந்துள்ளமை எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இது எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஒவ்வொரு வார இறுதியிலும் நான் கிண்ணியாவுக்கோ அல்லது மட்டக்களப்பிற்கோ விஜயங்களை மேற்கொண்டிருப்பேன். ஒரு முதலமைச்சர் சுறுசுறுப்பாக இருந்தால் அது அந்த மாகாண மக்களுக்கு நல்லதுதானே.
எந்தப் பிரதேச அரசியல்வாதிகளாயினும் சரி மக்கள் தமக்கு வழங்கிய ஆணையையும் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் சரியான முறையில் புரிந்து நடந்து கொண்டால் அவர்கள் ஏனைய பிரதேச அரசியல் வாதிகளின் வருகையைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை.
கிழக்கு மாகாண மக்களுள் அநேகமானவர்கள் தற்போது எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.நானும் அவர்களுக்காகவும் பொதுவாக இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்காகவும் பணியாற்ற தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளேன்.
வன்னியில் காணி அபகரிப்பில் வன இலாகா அதிகாரிகள்: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 01:34.41 PM GMT ]
படையினருக்கான காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் என்பவற்றுக்கு மேலாக வன இலாகாவுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்பட்டு பெருமளவு காணி பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வன்னியில் பல பகுதிகளிலும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் அளக்கப்பட்டு அவற்றுக்கான எல்லைகளைப்போடும் நடவடிக்கைகள் வன இலாகா அதிகாரிகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்களுடைய காணிகளும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் எனக் கூறப்பட்டு அபகரிக்கப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து வன இலாகா அதிகாரிகளுடன் தான் தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட காணி உரிமை யாளர்கள் அவை தம்முடையவை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பதிலளிக்கப்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்களின் காணி உறுதிகள் காணாமல் போய்விட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.
இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்ததாவது:
வனஇலாகா அதிகாரிகள் இலாகாவுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி அதன் எல்லைகளைக் குறிக்கும் வகையில் தூண்களை அமைத்து வருகின்றார்கள். இவ்வாறு எல்லைகளை அமைக்கும் போது பொதுமக்களுடைய காணிகள் பலவற்றையும் உள்ளடக்குகின்றார்கள்.
வன இலாகா அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை காரணமாக மேட்டுக் காணிகள் மற்றும் வயல் காணிகளும் கொண்டுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போது, உங்கள் காணிக்கான அத்தாட்சியைக் கொண்டுவருமாறு வனஇலாகா அதிகாரிகள் கேட்கின்றார்கள்.
ஆனால், 30 வருடகாலமாக இடம்பெற்ற போர் மற்றும் இடப்பெயர்வுகளின்போது இந்த மக்கள் தமது காணி அனுமதிப் பத்திரங்களை இழந்துவிட்டார்கள். இதனை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
மேலும், நீண்டகாலமாக புதிதாக காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாததோடு, இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழ்வோரது காணிகளும் இவ்வகையில் அடங்குவதாகவும் இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய காணிகளை சட்டரீதியாக அபகரிப்பதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் செயற்படுவதாகத் தோன்றுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள- முஸ்லிம் குடியேற்றங்கள் என்பவற்றுக்கு மேலாக தமிழர்களுடைய காணிகளை அபகரிப்பதற்காக அரசாங்கம் வகுத்துள்ள ஒரு உபாயமாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
அண்மையில் வேலங்குளம், பூவரசங்குளம், உசன் புளியங்குளம் போன்ற பல இடங்களில் இவ்வாறு மக்களுடைய காணிகள் பெருமளவுக்கு அபகரிக்கப்பட்டுள்ளன. வன இலாகா அதிகாரிகள் இராணுவத்தினருடன் வந்தே இந்தக் காணிகளை அபகரிக்கின்றார்கள்.
இப்பகுதிகளில் நான்கு ஐந்து தலைமுறைகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். போரால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்துள்ள மக்களின் ஒரே சொத்தாகவுள்ள அவர்களுடைய காணிகளையும் பிடுங்கிக்கொள்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் தடுத்து நெறுத்து முன்வர வேண்டும் எனறு சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten