[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:51.55 AM GMT ]
அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையின் தெரிவுகள் போட்டியின்றி நடைபெற்று முடிந்துள்ளன. டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முறை கடும் போட்டிக்குள் தேர்தல் மூலம் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தெரிவு செய்யப்பட்டபோதும், இம்முறை ஏகமனதாகத் தெரிவுகள் நடைபெற்றுள்ளன.
வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைவராக கடந்த முறை தெரிவு செய்யப்பட்டிருந்த டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் இம்முறையும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயலாளர் அ.அரிகரன், உப தலைவர் வை.திவாகரன், பொருளார் ப.செந்தூரன், உதவிச் செயலாளர் ஆர்.ராகுலன், பத்திராசிரியர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர நிர்வாக சபை உறுப்பினர்களாக செல்சியா மலர்விழி, ஏ.அசோக்குமார், ரி.பாலமுரளி, கே.கணேசானந்தன், கே.ராஜசேகரன், எஸ்.கணேஸ்குமார், எஸ்.செல்வாகரன், எஸ்.அறிவுச்செல்வன், திருமதி பி.முல்லை, ஆர்.சர்மா, ஜே.ஜி.பி நிஸங்க
வடக்கில் தேர்தல் கண்காணிப்புக்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு - கோப் தலைவர் எதிர்கட்சியில் இருந்து தெரிவாக வேண்டும்: கரு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:51.01 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு குழு, தேர்தல் முகாமைத்துவம் குறித்த தெற்காசிய கூட்டமைப்பு மற்றும் பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சில கட்சிகள் கோரியிருந்தன.
எனினும் தேசிய ரீதியான தேர்தல்களை தவிர்ந்த ஏனைய தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலின் உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம்
எதிர்வரும் மூன்று மாகாண சபைகளின் தேர்தலின் பொருட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது, உரிய ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானது என்று தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய கூறினார்.
நாளை முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் பிராந்திய தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வேட்பு மனுவில் குறிப்பிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கோப் தலைவர் எதிர்கட்சியில் இருந்து தெரிவாக வேண்டும்: கரு ஜயசூரிய
அரச பொது நிறுவனங்களில் ஏற்படும் நட்டம் மற்றும் மோசடிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழுவின் தலைவர், எதிர்கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோப் குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்த குழுவின் உறுப்பினர்களால் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
நட்டமீட்டும் அரச நிறுவனங்கள் தொடர்பாக ஆராய்ந்த கோப் குழுவிற்கு எதிர்கட்சியில் இருந்து தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அந்த குழு மேலும் பயன்தரத் தக்கதாக அமையும் எனவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten