‘ஷானியின் கயிற்றை விழுங்கிவிடாயா? உன்னை பிறகு பார்த்துக் கொள்கிறோம்’ - கைதியை மிரட்டிய சட்டத்தரணிகள்
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 07:37.52 PM GMT ]
‘ஷானியின் கயிற்றை விழுங்கிவிடாயா? உன்னை பிறகு பார்த்துக் கொள்கிறோம்’ என மூன்று சட்டத்தரணிகளும் தம்மை அச்சுறுத்தியதாக முதலாவது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா போட்டியிடவிருந்த போதும் அவர் வலுக்கட்டாயமாக அதில் இருந்து விலகிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்
இரகசியப் பொலிஸார் இடமிருந்து அல்ல சட்டத்தரணிகளிடம் இருந்தே இந்த மிரட்டல் வந்ததாக தெரிவித்த அரச சட்டத்தரணி பெரேரா, சந்தேக நபர்கள் சட்டத்தரணிகளின் பிரதிநிதித்துவம் தேவையில்லை எனத் தெரிவிக்கும் போது அவர்கள் சார்பில் காரணங்களை விளக்க இடமளிக்க முடியாததெனத் தெரிவித்தார்.
கடும் பாதுகாப்புடன் சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். விசாரணைகள் தொடர்வதாக இரகசியப் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரா அறிக்கை சமர்ப்பித்து தெரிவிக்கையில்:-
பிரதி பொலிஸ் மா அதிபரின் மகனைக் கைது செய்ய தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. காலியில் இரு வீடுகளையும், மிரிஹானையில் ஒரு வீட்டையும் சோதனை இட்டோம். துப்பாக்கி தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றமிழைத்த போது சந்தேக நபர்கள் அணிந்திருந்த உடையை டீ. என். ஏ. பரீட்சைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ஷானி அபேசேகர தெரிவித்தார்.
முதலாவது சந்தேக நபரின் தாயும், மனைவியும் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டத்தரணி அஜீத் பத்திரன தெரிவித்த போது குற்றஞ் சுமத்தப்பட்ட முதலாவது நபர் அதனை நிராகரித்து சட்டத்தரணிகள் தம்மை மிரட்டியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கை ஒத்திவைத்து சட்ட ஆலோசனை பெறுவது தொடர்பாக சரியான முடிவுக்கு வருவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி வர்ணகுலசூரிய யோசனை தெரிவித்தார்.
தாமும், தமது கனிஷ்ட சட்டத்தரணிகளும் சந்தேக நபர்களுக்கு ஆலோசனைகளையே வழங்கினோம். மிரட்டல், அச்சுறுத்தல்களைக் கொடுக்கவில்லை என சட்டத்தரணிகளான பத்திரனவும், செனவிரத்னவும் தெரிவித்தனர். விசாரணைகளை ஆகஸ்ட் 01 ஆம் திகதி பிற்பகல் 02 மணிவரை ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் சகல சந்தேக நபர்களையும் அத்தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மாவை சேனாதிராஜாவை மிரட்டிய வெளிநாட்டு தூதரகங்கள்?: வீரவன்சவின் கண்டுபிடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 05:01.46 PM GMT ]
இலங்கையில் உள்ள இரண்டு வெளிநாட்டு தூதரகங்களினால் மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளர் நிலையில் இருந்து இறக்கப்பட்டதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது போட்டியில் இருந்து விலகாவிட்டால், ஒரு நாடு தமது நாட்டிலுள்ள மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தை திருப்பியனுப்பப் போவதாக அச்சுறுத்தியது.
மற்றும் ஒரு நாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனியே சந்தித்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் நிலையை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் மூலம் சட்டரீதியாக தனியான தமிழ் ஈழம் ஒன்றுக்கான வழியை அமைக்க முடியும் என்ற காரணத்தைக் கொண்டே குறித்த இரண்டு வெளிநாட்டு தூதரகங்களும் செயற்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten