சிறுபான்மை கட்சிகள், எதிர்க்கட்சி தலைவரை இரகசியமாக சந்திக்க தயாராகின்றனர்- கரு, சஜித்தை ஓரம் கட்ட நடவடிக்கை
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 04:21.15 AM GMT ]
இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய சிறுபான்மை கட்சிகளே இவ்வாறு ரணிலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
வெளிநாடொன்றில் இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கரு, சஜித்தை ஓரம் கட்ட நடவடிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை ஓரம் கட்டும் நடடிக்கை தொடர்வதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தெரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவில், குறித்த இரண்டு சிரேஸ்ட தலைவர்களும் உள்ளடக்கப்படவில்லை.
இந்த இருவரும் கடந்த கால வேட்பாளர் தெரிவுக்குழுக்களில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமைய கரு ஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் ஓரம் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எந்தவிதமான காரணமும் இன்றி குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேட்பாளர் தெரிவுக் குழுவிலிருந்து நீக்கபபட்டுள்ளனர்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா: இலங்கை குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 04:19.03 AM GMT ]
அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மைக்கல் ஏர்வின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, வடமாகாணசபைத் தேர்தல், இராணுவ பிரசன்னம், தேர்தல் கண்காணிப்பு, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, வடமாகாணசபைத் தேர்தல், இராணுவ பிரசன்னம், தேர்தல் கண்காணிப்பு, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் கொழும்பு ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விஜயம் வழமையான ஒன்று எனவும் நாட்டின் அநேக பகுதிகளுக்கு இவ்வாறு தூதரக அதிகாரிகள் விஜயம் செய்வதாகவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விஜயம் வழமையான ஒன்று எனவும் நாட்டின் அநேக பகுதிகளுக்கு இவ்வாறு தூதரக அதிகாரிகள் விஜயம் செய்வதாகவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten