தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடப் போவதில்லை: இராணுவம்- ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு கடுமையான தண்டனை

இலங்கை அரசியல்வாதியொருவர் மாலைதீவு ஜனாதிபதிக்கு 4 பில்லியன் பணம் வழங்க முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:05.03 AM GMT ]
இலங்கை அரசியல்வாதியொருவர் மாலைதீவு ஜனாதிபதிக்கு நான்கு பில்லியன் ரூபா பணத்தை வழங்க முயற்சித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக இவ்வாறு பணம் வழங்கினார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவு அமைச்சர் ஒருவருடன் சென்ற குறித்த இலங்கை அரசியல்வாதி, அந்நாட்டு ஜனாதிபதிக்கு 4 பில்லியன் ரூபா பணத்தை வழங்க முயற்சித்துள்ளார்.
எனினும், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் வஹீட் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.கதவைக் காண்பித்து வெளியேறிச் செல்லுமாறு மாலைதீவு தெரிவித்துள்ளார்.
ஏன் எனக்கு பணம் வழங்குகின்றீர்கள், உங்களது நாட்டு ஜனாதிபதிக்கு பணம் வழங்குங்கள் என அவர் குறிப்பிட்டதாகவும் சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடப் போவதில்லை: இராணுவம்- ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு கடுமையான தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:27.21 AM GMT ]
பொலிஸார் கோரிக்கை விடுத்தாலே தவிர, வேறு வழிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தினர் சிவிலியன் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். குறிப்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபடப் போவதில்லை.
எவ்வாறெனினும், போர் நிறைவுக்குக் கொண்ட வந்த போதிலும் இன்னமும் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன.
சில தரப்பினர் பிரிவினைவாத நோக்கங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்காது.
குழப்ப நிலைமைகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவிகள் வழங்கப்படும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பொலிஸாரின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் உத்தியோகத்தர்கள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் உத்தரவிற்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து இந்த விசாரணகைள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணல், லஞ்சம் பெற்றுக் கொள்ளல், போதைப் பொருள் கடத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், பாலியல் ரீதியான லஞ்சம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலருக்கு எதிராகவும் இவ்வாறு பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten