[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:38.12 AM GMT ]
இலங்கையில் தீவிரமாக பரவத் தொடங்கியிருக்கும் எயிட்ஸ் நோய் காரணமாக இந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் படையெடுப்பு என்பன காரணமாக அண்மைக்காலங்களில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த 6 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 90 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சந்திரிக்கா? பரபரப்புத் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 02:40.09 AM GMT ]
எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவே அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதன் பின்புலத்தில் தற்போது வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பொன்சேகா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரிக்கா போட்டியிடவுள்ளதாக குறித்த இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் ஆதரவுத் தளம் மற்றும் வடமேல் மாகாணத்தில் வசிக்கும் அதிகளவான இராணுவத்தினரின் ஆதரவு என்பவற்றைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தை கைப்பற்றும் வியூகத்தில் பொன்சேகா இறங்கியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் சந்திரிக்காவிடம் இருந்து இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten