தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை- நாடாளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம்!

இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றபடாது, தொடர்ந்தும் உரிமை மீறல்கள் இடம்பெற்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
போரின் பின்னரான நல்லிணக்க மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளர் அலிஸ்டர் பெர்ட் தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை தெளிவாக வலியுறுத்தி வருகின்றோம்.
வட மாகாணசபைத் தேர்தல் நீதியானதாக நடைபெற வேண்டும். மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிலைமைகளில் மாற்றமில்லாவிட்டால் மீண்டும் இலங்கைக்கு எதிராக செயற்பட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம்
பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழுவொன்று நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் நோக்கிலேயே அவர்கள் இலங்கை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தொழில் கட்சியைச் சேர்ந்த சைமன், கெரி மக்காத்தி மற்றும் லோட் ஷீக், கொன்சவேற்றிவ் கட்சியைச் சேர்ந்த இலனோர் உட்பட ஐவர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 22ம் திகதி முதல் 26ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்த குழுவினர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் சமல் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பிரதான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களையும் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை வரும் பிரிட்டிஷ் குழுவிற்கான அனுசரணைகள் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ்  உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten