[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 03:51.11 AM GMT ]
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் சமுகத் தேவைபாடுகளை நிறைவேற்றி நிருவகிப்பதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்கியும் அதன் கீழ் பல அமைப்புக்களை சபைகளையும் கூட்டுத்தாபனங்களையும் உருவாக்கி அரசியல் செல்வாக்குடன் பலமான முறையில் மாகாண சபைகள் செயல்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகளின் திட்டமிடலின்றி செயல்பட்டு வந்தது. இருந்த போதும் வெளிநாடுகளின் நிதி உதவியுடன் சமுக நலன்கருதிய நல்ல அதிகாரிகளின் திட்டமிடலூடாகவும் நிருவாகத் திறமை காரணமாகவும், பல திணைக்களங்களின் நிருவாகங்கள் திறன்பட செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு எதிர் மாறாகவும் ஒருசில அதிகாரிகள் செயற்பட்டு வந்ததும் உண்டு.
ஆனால் 13வது திருத்தச்சட்டம் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் முழுமை பெறவில்லை.
மத்திய அரசின் உத்தரவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஆளுனர் அவர்கள், வடக்கு கிழக்கு நிருவாகங்களை மத்திய அரசுக்குச் சார்பாகவும், வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற நிதியைச் சரியாக செயற்படுத்துகின்றோம் என்று வெளி உலகிக்கு காட்டிக் கொள்வதற்கான போலிப் பிரசாரத்தை மேற்கொண்டும் சில உயர் அதிகாரிகளுக்கு பதவி ஆசை காட்டி தமக்கு சார்பான செயற்பாட்டில் ஈடுபட வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுலாக்குவதற்கோ, மாகாண அமைப்பு முறைதொடர்பான மேலதிக உரிமைகளை பெறுவதற்கோ எந்த முயற்சிகளையும் ஆளுனர் மேற்க் கொள்ளவில்லை. ஒருசில உயர் அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக தங்கள் பதவி பறிபோகும் எனும் அச்சத்துடன் செயற்பட்டு வந்தனர்.
எதிர்காலத்தில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாக செயல்படும் போது எமக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை சர்வதேச ரீதியாக அதிகார பலத்தடன் எடுத்துக் கூறுவதற்கு முடியும்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பான செயல்பாட்டை வீரியத்துடன் முன்னெடுக்க முடியும் மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கலுக்கான குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யவதோடு தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு மத்திய அரசுடன் பேரம் பேச முடியும்.
சர்வதேச ரிதீயாக நிதிகளைப் பெறுவதற்கும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரப் பலமிக்க ஆளும்தரப்பாக செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள முடியும். இவ்வாறான பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபையிலும் மேற்கொள்ள முடியும்.
ஆகவே வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான வெற்றியைப் பெற கிழக்கு மாகாண மக்கள் பங்காளிகளாக மாறதயாராக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படகு அகதிகள் 83 பேர் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றம்: சட்டவிரோதமான முறையில் 18000 வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 03:08.01 AM GMT ]
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து அவுஸ்திரேலியா புதிய நடைமுறையை அறிவித்ததையடுத்து, முதலாவது சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளதாக அவுஸ். உள்துறை அமைச்சர் ஜேசன் க்ளேயர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
81 அகதிகளையும், 2 மாலுமிகளையும் கொண்ட இந்த படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதில் வந்தவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்ற அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்த நாட்டு பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
அதில் விசா இல்லாமல் சட்ட விரோதமாக படகுகள் வந்தவர்களுக்கு நாட்டில் இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகதி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் 18000 வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ளனர்
சட்டவிரோதமான முறையில் 18000 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் இவர்கள் தங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்து நாடு கடத்த தேசிய புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் குறித்த தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் திரட்டி வருகின்றனர். வர்த்தகர்கள், அறுவடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நாட்டுக்குள் பிரவேசித்து தங்கியிருக்கின்றனர்.
வெளிநாட்டு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு நாட்டில் தங்கியிருக்கின்றனர். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சட்டவிரோமான முறையில் தங்கியிருக்கின்றனர்,
Geen opmerkingen:
Een reactie posten