முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார குழு தலைவர்கள் நியமனம்- கூட்டு பொலிஸ் துறையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 09:56.57 AM GMT ]
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ ரெலோ அமைப்பின் அலுவலகம் மீது இனம்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கட்சியின் அதியுயர் பீட கூட்டத்தில், தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண சபையின் பிரசாரக் குழுவின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண சபை குழுத் தலைவராக தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தின் பிரசார குழுத் தலைவர்களாக எம்.எப். தௌபிக், பைசர் காசிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டு பொலிஸ் துறையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி?
மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் கீழ் இயங்கும் கூட்டு பொலிஸ் துறையை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் அதிகாரங்களை எப்படி பகிர்வது என்பது பற்றி உரிய கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை.
என்றாலும் பிரதான பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்று இதன் போது கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
கீழ் மட்ட பொலிஸ் அதிகாரிகளின் நிர்வாக நடவடிக்கைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன மாகாண சபைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது.
யாழில் ஸ்ரீ ரெலோ அமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 10:59.43 AM GMT ]
இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்களே அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் அலுவலகம் சேதமாகியுள்ளதாகவும் இது குறித்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீ ரெலோ அமைப்பின் அலுவலகம் மீது ஏற்கனவே இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten