தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதி சுகவீனமுற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கையிலிருந்து நான்கு கிலோ தங்கக் கட்டிகள் கடத்தல்! மூன்று பெண்கள் உட்பட 4பேர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 09:32.17 AM GMT ]
இலங்கையிலிருந்து நான்கு கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை இந்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்திவரப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து ரகசிய சோதனையில் இறங்கினர்.
கொழும்பில் இருந்து அதிகாலை சென்னைக்கு வந்த விமானம் தறையிறங்கியவுடன், விமானத்தின் உள்ளே சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், பயணிகளிடம் சோதனை செய்தனர்.
அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிதத புதுக்கோட்டையைச் சேர்ந்த பார்வதி, அமராவதி, சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த ஜெயமணி, ஆகிய மூன்று பெண்களையும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரையும் தனியறைக்குச் அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
அவர்களது உடைகளில் இருந்த ரகசிய அறைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மொத்தம் நான்கு கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதி சுகவீனமுற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 09:42.29 AM GMT ]
வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதி சுகவீனமுற்றநிலையில் வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்க வேண்டும் என கோரி தமிழ் அரசியல் கைதியான 22 வயதான சுந்திரலிங்கம் கேதீஸ்வரன், கடந்த இரண்டு வாரங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
தனது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையிலே இவர் தற்போது சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். காடுகளில் இருந்த விடுதலை புலி உறுப்பினர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களை வழங்கியதாகவே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. எனவே இவர் மகசின் சிறையிலிருந்து வழக்குக்காக அழைத்துச் செல்லப்படுவதும், பின்னர் மகசின் சிறைக்கு அழைத்து வருவதும் வழமை. இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது குறித்த பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளிலும் தற்காலிகமாக அவர் தங்க வைக்கப்படுவார்.
இவ்வாறு கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பிற சிறைகளில் தங்கவைக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் அவர், கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய பிறப்பு உறுப்பு பகுதி கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten