தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது!

டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பொருட்களின் விலை உயரும்- இலங்கைக்கு அனுப்பிய எண்ணெய் தரமானது: எமிரேட்ஸ் ஒயில் நிறுவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 11:43.35 AM GMT ]
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரிப்பதன் காரணமாக, இலங்கை நாணயம் வீழ்ச்சியடைவதன் மூலம் அத்தியாவசிய உணவுப்  பொருட்களின் விலை அதிகரிக்கும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதன் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்யும் போது அதிக செலவீனம் ஏற்படுவதாக கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
இறக்குமதிக்கான உறுதிப் பத்திரம் சில வாரங்களுக்கு முன்னர் வங்கியின் ஊடாக ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. எப்படியிருப்பினும், அவை இலங்கை வந்தடையும் போது மேலதிகமான செலவீனத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெண்காயம், பருப்பு, சீனி, அரிசி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பால் வகைகள் என்பனவற்றிற்றின் விலைகள் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு அனுப்பிய எண்ணெய் தரமானது- எமிரேட்ஸ் நஷனல் ஒயில் நிறுவனம்
எமிரேட்ஸ் நஷனல் ஒயில் நிறுவனத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட எண்ணெய் உரிய  தரத்தைக் கொண்டது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்ப்ஃ நியுஸ் செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்விற்கமைய இலங்கையினால் கோரப்பட்ட தரத்துடனான எண்ணெயே விநியோகிக்கப்பட்டதாக நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய விநியோகிக்கப்பட்ட எண்ணெய் உரிய தரத்தைக் கொண்டிருக்க வில்லை என்று இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் நிராகரித்திருந்தது.
நிராகரிக்கப்பட்ட எண்ணெக்கு பதிலாக வேறு தொகுதி எண்ணெய்யை விநியோகிக்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை.
இதுதவிர, எதிர்வரும் காலங்களில் கனியவளக் கூட்டுத்தாபனத்தினால் கோரப்படும் கேள்வி பத்திரங்களில் எமிரேட்ஸ் நஷனல் ஒயில் நிறுவனம் பங்குகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூலை 2013, 12:02.27 PM GMT ]
மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
28 வயதான இலங்கை பெண்ணுக்கும், இலங்கை சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையில் இருந்த உறவு காரணமாக பிறந்த குழந்தையை, குறித்த பெண் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
2010ம் ஆண்டு முதல் இந்த பெண், சம்பந்தப்பட்ட இலங்கை நபருடன் தொடர்புகளை கொண்டிருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதுடன், தான் இல்லாத நிலையில், குழந்தையை பராமரிக்க எவரும் இல்லை என்பதால் குழந்தையை உயிருடன் விட்டு வைக்க விரும்பாமல் கொலை செய்ய முயன்றுள்ளார்.
தற்கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவர் பாரிஸில் உள்ள சென்ட் லுயிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த பெண், பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபர், பெண்ணின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண், கணவர் மற்றும் இலங்கை நபரின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
கடும் தீக்காயங்கள் மற்றும் உடலுக்குள் காயங்களுடன் ஆபத்தான நிலைமையில் இருந்த குழந்தை, ஆபத்தான கட்டத்தில் இருந்து மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten