முல்லைத்தீவில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு காணிகள் - தேர்தல்கள் ஆணையகத்தின் கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு முடிவு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 04:38.36 AM GMT ]
குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதுடன், சட்டத்திற்கு முரணான இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளரை நேரில் சந்தித்துப் பேசவும் தீர்மானித்திருப்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன், வியாழன் ஆகிய நாட்களில் பெருமளவு சிங்கள முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமையும் மீளவும் காணிக் கச்சேரி நடத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
இதனடிப்படையில் விடயத்தை தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
அது மட்டுமல்லாமல் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும், அதனடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தேர்தல்கள் ஆணையாளருக்கு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் களமிறக்க நடவடிக்கை?
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 02:57.41 AM GMT ]
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் வேட்பாளர் பங்கீடு தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் நிறுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக கூட்டமைப்பினருக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.
ஆயினும் இவை தொடர்பான இறுதித் தீர்மானம் நாளையே மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten