தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு!
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 11:49.25 PM GMT ]
வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால்  ஈபிடிபி கட்சிக்கு  20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் பொது நூலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது கட்சி  போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 04:57.41 AM GMT ]
மன்னார் மாவட்டத்தில் நிலவும் பற்றாக்குறைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக சென்று ஆராயும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இரண்டு அமைச்சர்கள் நேற்று மாலை அங்கு சென்றிருந்தனர்.
மன்னார் மறை மாவட்ட கிறிஸ்தவ குருக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த 18ம் திகதி அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டிருக்கவில்லை.
இதன்படி, நேற்று மன்னாருக்கு சென்றிருந்த அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் மத குருக்களை சந்தித்து பேசியிருந்தனர்.
மன்னாரில் தற்போதுள்ள பிரச்சினையான சட்டவிரோத மீள்குடியேற்றம், பாகுபாடான தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சர்கள் ஆயருடன் தீவிரமாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten