[ புதன்கிழமை, 03 யூலை 2013, 05:57.59 AM GMT ]
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான லஞ்சத்தை வழங்குவது பாரதூரமானது எனவும் இது பற்றி லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தேர்தல் ஆணையாளர், பொது நிர்வாகம் உள்நாட்டலுவலகள் அமைச்சிடம் முறையிடப் போவதாகவும் புத்ததாச மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைமுறை ரத்துச் செய்யப்படாவிட்டால் தீக்குளிப்போம்: பொதுபல சேனா எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 11:29.54 PM GMT ]
மாகாண சபை முறையை ரத்துச் செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று மகரகமையில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.
பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அரசின் ஆதரவு மற்றும் அனுசரணை கிடைத்திருந்தது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர், மாகாண சபை முறைக்கு ஆதரவான அமைச்சர்களை கடுமையாக திட்டித் தீர்த்தார்.
மாகாண சபை முறைக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் உடனடியாக தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபை முறை நீக்கப்பட்டால் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சவால் விட்டுள்ளார்.
ஆனால் மாகாண சபை முறை நீக்கப்படாவிட்டால், அதனை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பௌத்த பிக்குமார்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இறைமையில் தலையிடாதே!அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது! பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!
13 வது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுபல சேனா இயக்கம், நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. அதன்போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இந்த மகஜர் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
13 வது திருத்தச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என வலியுறுத்தி நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குமார்கள் கலந்து கொண்டனர்.
பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகியது.
இலங்கையின் இறைமையில் தலையிடாதே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஏந்திய வண்ணம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரை சென்றனர்.
பின்னர் உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி முதல் காலி முகத்திடல் சுற்று வட்டம் வரையிலான வீதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததுடன் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது.
இந்திய தலையீடுகளை கண்டித்து தமது கட்சியின் நிலைப்பாடுகளை வெளியிடும் நோக்கில் இந்திய பிரதமருக்கு மகஜரை கையளித்ததாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘மாகாணசபை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மாகாண சபை முறையை ரத்து செய்யக்கோரும் தேசிய ஒன்றியம் இன்று பிற்பகல் மஹரகமயில் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது.
மாகாண சபை முறைமையின் ஊடாக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று மாநாட்டில் கலந்து கொண்ட களனி பல்கலைக்கழகத்தின் கலாசார கல்வி பிரிவின் விரிவுரையாளர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten