[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 04:25.55 AM GMT ]
யாழ். மாவட்டத்தில் அராலி இராணுவ முகாமில் கடமைபுரியும் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவர் நேற்றுக் காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் குறித்த இராணு பொறுப்பதிகாரி, முகாமுக்குள் படுக்கைக்குச் சென்றுள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் யாருக்கு தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றுக்காலை சிப்பாய் ஒருவர், மேஜருக்கு தேநீர் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், படுக்கையில் மூச்சின்றிக் கிடந்த மேஜரைக் கண்டதும்,சிப்பாய் ஏனைய படைவீரர்களுக்கு இதுபற்றி அறிவித்தார்.
உடனடியாக அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். மேலதிக இழைய பரிசோதனைகளுக்காக உடற்கூறுகள் சில கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அம்பன் பொல, மாம்பிட்டி கலட்ட வீதியைச் சேர்ந்த மேஜர் ஹேரத் முதியான்சலாகே சமந்த ஹேரத் (வயது 38) என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் யாருக்கு தேவை?: ஜனாதிபதி கேள்வி
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 04:18.00 AM GMT ]
ரம்புக்கன்ஓய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்தின் கொடூரத்தை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறைக்கு உள்ளானவர்களே நன்கு அறிவார்கள்.
ஏனைய மாகாணங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களையோ அல்லது தனி இராச்சியத்தையோ கோரவில்லை.
மக்கள், அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவை ஆற்றப்படுகின்றதா என்பதனையே கருத்திற் கொண்டனர், காணி பொலிஸ் அதிகாரங்கள் பற்றி கவலைப்பட்டதில்லை.
மக்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்கிய மோசமான வரலாற்றுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததனைப் போன்றே, பொருளாதார பின்னடைவுகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten