தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

புலிகளோ, வேறு சக்திகளோ எமது சுதந்திரத்தை மீள அபகரிக்க இடமளிக்க முடியாது! - மஹிந்த ராஜபக்‌ஷ !

பல அர்ப்பணிப்புக்களுடன் பெறப்பட்ட சுதந்திரத்தை எவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள அமைதிச் சூழலையும் மக்கள் மத்தியிலுள்ள ஐக்கியத்தையும் சீரழிப்பதற்கு பல சக்திகள் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றன என தெரிவித்த ஜனாதிபதி, அதனைப் பாதுகாப்பதற்கு சகலரும் தயாராக வேண்டிய யுகம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
புலிகளோ அல்லது வேறு சக்திகளோ எமது சுதந்திரத்தை மீள அபகரிக்க இடமளிக்க முடியாதென அம்பாறை ரம்புக்கென் ஓயா நீர்ப் பாசனத்திட்டத்தை மக்களிடம் கையளித்த வைபவத்திலே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தை சகல மக்களும் கெளரவமாக வாழும் பிரதேசமாக நாம் கட்டியெழுப்பியுள்ளோம். சகல இன, மத மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். இனி இந்த பிரதேசத்தை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
புலிகளல்ல வேறு எந்த சக்திகளும் எந்த விதத்திலும் இத்தகைய சுதந்திரத்தை இல்லாதொழிக்க இனி இடமளிக்கப்படமாட்டாது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து துறைமுகம், விமான நிலையம், நீர்ப்பாசனத் திட்டங்கள் என நாம் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்களை பொறாமை எரிச்சலோடு சில சக்திகள் நோக்குகின்றன. அதற்கு இடமளிக்க முடியாது என மேலும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten