[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 06:39.47 AM GMT ]
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய செய்கைகளைக் காட்டியும், வீட்டுக் கடன், வாகங்களை லீசிங் கடன் என அதிகளவான வங்கிக்கடன்களைத் தனியார் வங்கிகளிலும் அரச வங்கிகளிலும் பெற்றுக் கொண்டு, அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் கடன்பட்டோர் தலைமறைவாகி வருகின்றனர். இவர்களைத் தேடி வங்கி உத்தியோகத்தர்கள் வீடுவிடாக செல்கின்றனர்.
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டு இப் பிரதேச விவசாயிகள் வங்கிகளில் சில கமக்கார அமைப்புக்களின் துணையுடன் தவறான தகவல்களை வழங்கி அதிக வங்கிக் கடன்களைப் பெற்று அவற்றைத் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்றுவரை குறித்த கடன்களை மீளச் செலுத்தாத நிலை காணப்படுகின்றது என வங்கியாளர்கள் குறிப்பிடுகின்றனர்
இந்நிலையில் கடன்களை வழங்கிய தனியார் வங்கிகள் மற்றும் அரச வங்கிகள் பல தடவைகள் கடனாளிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியபோதும் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாத நிலையில் வங்கி உத்தியோகத்தர்கள் தினமும் கடனாளிகளைத் தேடி வீடுவீடாகச் செல்கின்றனர்.
வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாத கடனாளிகள் சிலருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: கெலம் மக்ரே
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 04:25.21 AM GMT ]
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும்.
இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்ட பூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமான்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு உணவு தட்டுக்கு 60 ஸரெலிங் பவுண்ட்கள் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல்-4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே மற்றும் பி.பி.சீ ஊடகவியலாளர் பிரன்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் இலங்கை மாநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் அலிஸ்டர் பட்டிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர் என சிங்களப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten