தயாசிறி தொடர்பில் பந்தயத்தில் தோல்வியடைந்தவர் உள்ளாடையுடன் நகரில் பயணம்!வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே!- அத்துல விஜேசிங்க
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 06:07.39 AM GMT ]
தயாசிறி ஜயசேகர ஆளும் கட்சியில் இணைந்து கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக மாட்டார் என பந்தயம் கட்டிய நபரொருவர். பந்தயத்தில் தோற்று உள்ளாடையடன் தெரனியகல நகரில் நடமாடியுள்ளார்.
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் உள்ளாடையுடன் தெரனியகல நகரில் நடந்து சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தயாசிறி ஆளும் கட்சியில் இணைந்தாலும் நானே முதலமைச்சர் வேட்பாளர் - வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தானே என்றும் இதில் எந்த மாற்றங்களும் இல்லை என்றும் அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அத்துல விஜேசிங்க திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட போவதாக கூறி, தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகி நேற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அத்துல விஜேசிங்க,
தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொண்டதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அது அவர் எடுத்த முடிவு.
ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது என்று நான் எடுத்துள்ள முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை.
எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை காண நானும் காத்திருக்கின்றேன்.
எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.
தயாசிறியின் திடீர் மாற்றம் புரியாத புதிராக உள்ளது: ஜோன் அமரதுங்க
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்தினம் ஆளும் கட்சியினரிடம் கேள்விகளை கணைகளை தொடுத்ததாகவும் மறுநாள் எப்படி அவருக்கு அரசு மீது தெளிவு ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கின்றது என ஐக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் தயாசிறி ஜயசேகர பதவியில் இருந்து விலக தீர்மானித்திரு்ந்தார்.
எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் மட்டுமல்ல கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் அவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தருணம் பார்த்து காத்திருந்தார்.
அண்மையில் ஒரு நாள் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு தயாசிறி கோரியிருந்தார். நான் தலைவர் பதவியை ஏற்ற பின்னரே அவர் அந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பிறகு, அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் பெரேரா,
தயாசிறி ஜயசேகர கொள்ளை பிடிப்பு கொண்டிருந்த நபர். ஆனால் நேற்றைய தினம் அவரது கொள்கைகளை முடிவுக்கு வந்து விட்டன.
இலங்கையின் அரசியல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் பாரிய கவலை ஏற்பட்டது. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார் எனத்தெரிவித்தார்.
விக்னேஸ்வரனை களமிறக்கியமை பாராட்டத்தக்கது! கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும்: அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 06:36.15 AM GMT ]
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எடுத்த முயற்சியை பாராட்டுகின்றோம்.
இதுவரை காலமும் மத்திய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்றி அரசாங்கத்தினால் நடத்த முடியாமல் இருந்தது.
ஆனால் தற்போது மாகாண அரசாங்கத்தையும் நடத்த முடியாமல் தயாசிறி ஜயசேகரை இழுத்துக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஒன்றிணைப்போம் என்ற அமைப்பின் சார்பில் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அசாத் சாலி அங்கு மேலும் கூறியதாவது
மத்திய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இன்றி அரசாங்கத்தினால் நடத்த முடியாமல் இருந்தது. தற்போது இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சென்றவர்களே இயக்கி வருகின்றனர்.
ஆனால் தற்போது மாகாண அரசாங்கத்தைக் கூட நடத்த முடியாத அளவுக்கு அரசாங்கம் சென்றுவிட்டது. அதனால் வடமேல் மாகாணத்தில் போட்டியிட வைக்க ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தயாசிறி ஜயசேகரை இழுத்துக் கொண்டுள்ளனர்.
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்ததும் அரசாங்கம் பயந்து விட்டது.
அதனால் அவரின் கடந்த கால தீர்ப்புக்களை ஆராயவேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார். அவர் நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்று தற்போது 10 வருடங்கள் கடந்துவிட்டன.
மாகாண சபை முறைமையானது வடக்கு கிழக்கு மக்களுக்காகவே கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை மாகாண சபை வடக்குக்கு செல்லவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்கள் குறித்து பயப்படுகின்றனர்.
ஆனால் 13ம் திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே உள்ளன. அவரைத் தாண்டி எதனையும் செய்ய முடியாது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
விரட்டினாலும் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கத்தை விட்டு விலகினால் அதியுயர் பீடத்தில் உள்ள அனைவரையும் அரசாங்கம் பக்கம் இழுத்தெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளை உடைத்தமை தொடர்பில் ஜனாதிபதி சாதனையே படைத்துள்ளார். தற்போது கூட்டமைப்பையும் உடைக்க முயற்சிக்கப்படுகின்றது.
ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எடுத்த முயற்சியை பாராட்டுகின்றோம்.
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும் என்றார்.
செய்தியாளர் மாநாட்டில் நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தகவல் வெளியிடுகையில்
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது எமக்கு கிடைத்த வெற்றியாகும். 13வது திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு முயற்சித்தனர்.
தற்போது அதனையும் கைவிட்டு 13 ஆம் திருத்தத்துக்கு அமைவாகவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்றனர். இதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களே காரணமாகும்.
13ம் திருத்தத்துக்கு அமைய தேர்தலை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியவர்கள் இன்று மெளனமாக இருக்கின்றனர். அவர்கள் அடுத்த பிறவியலாவது 13வது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதாக கூறுகின்றனர்.
எது எவ்வாறெனினும் வடக்குத் தேர்தல் நடைபெறுவதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். வடக்குத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தோல்வி நிச்சயமாகும்.
எது எவ்வாறெனினும் வடக்குத் தேர்தல் நடைபெறுவதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும். வடக்குத் தேர்தலில் அரசாங்கத்துக்கு தோல்வி நிச்சயமாகும்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அரசாங்கத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten