தயாசிறி தொடர்பில் பந்தயத்தில் தோல்வியடைந்தவர் உள்ளாடையுடன் நகரில் பயணம்!வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் நானே!- அத்துல விஜேசிங்க
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 06:07.39 AM GMT ]
தயாசிறி ஜயசேகர ஆளும் கட்சியில் இணைந்து கொள்வாரா? இல்லையா? என்பது குறித்து அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக மாட்டார் என பந்தயம் கட்டிய நபரொருவர். பந்தயத்தில் தோற்று உள்ளாடையடன் தெரனியகல நகரில் நடமாடியுள்ளார்.
பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் உள்ளாடையுடன் தெரனியகல நகரில் நடந்து சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தயாசிறி ஆளும் கட்சியில் இணைந்தாலும் நானே முதலமைச்சர் வேட்பாளர் - வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் தானே என்றும் இதில் எந்த மாற்றங்களும் இல்லை என்றும் அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அத்துல விஜேசிங்க திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட போவதாக கூறி, தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகி நேற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அத்துல விஜேசிங்க,
தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொண்டதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அது அவர் எடுத்த முடிவு.
ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது என்று நான் எடுத்துள்ள முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை.
எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை காண நானும் காத்திருக்கின்றேன்.
எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.
தயாசிறியின் திடீர் மாற்றம் புரியாத புதிராக உள்ளது: ஜோன் அமரதுங்க
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்தினம் ஆளும் கட்சியினரிடம் கேள்விகளை கணைகளை தொடுத்ததாகவும் மறுநாள் எப்படி அவருக்கு அரசு மீது தெளிவு ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கின்றது என ஐக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் தயாசிறி ஜயசேகர பதவியில் இருந்து விலக தீர்மானித்திரு்ந்தார்.
எதிர்வரும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் மட்டுமல்ல கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் அவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தருணம் பார்த்து காத்திருந்தார்.
அண்மையில் ஒரு நாள் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு தயாசிறி கோரியிருந்தார். நான் தலைவர் பதவியை ஏற்ற பின்னரே அவர் அந்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பிறகு, அரசாங்கத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் பெரேரா,
தயாசிறி ஜயசேகர கொள்ளை பிடிப்பு கொண்டிருந்த நபர். ஆனால் நேற்றைய தினம் அவரது கொள்கைகளை முடிவுக்கு வந்து விட்டன.
இலங்கையின் அரசியல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் பாரிய கவலை ஏற்பட்டது. அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார் எனத்தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய படகு விபத்து: கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் பலி
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 05:07.25 AM GMT ]
இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஜாவாவில் உள்ள சிடான் நகருக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் மாலை இந்தப் படகு கடலில் மூழ்கியது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால், பயணத்தை ஆரம்பித்த 9 மணி நேரத்தில் இந்தப் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது.
இந்தப் படகில் பயணம் செய்த 204 பேரில், 189 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் இரு பெண்கள் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை, ஈரான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த மேலும் ஆறு அகதிகள் காணாமற்போயுள்ளனர்.
படகு நீரில் மூழ்கத் தொடங்கியதும், சில அகதிகள் உயிர்காப்பு படகில் ஏறித்தப்பினர். பலர் கடலில் குதித்து நீந்திய போது, மீனவர்களாலும், இந்தோனேசிய பாதுகாப்பு துறையினராலும் காப்பாற்றப்பட்டனர்.
அதேவேளை இந்தப் படகில் பயணம் செய்த 44 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
மீட்கப்பட்ட ஒருவர் தகவல் வெளியிடுகையில், உயிர்தப்பிய அகதிகள் அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் தப்பியிருக்கலாம் என்பதால், காணாமற்போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
உயிரிழந்த சிறுவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஈரான் பெண் ஒருவரும் மரணமானதாகவும், சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் குடிவரவு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten