தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juli 2013

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பிரித்தால், தேசிய பொலிஸ் சேவைக்கு இடமிருக்காது: வீரவன்ச கவலை!

யாழ், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:26.38 AM GMT ]
மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகிதி காலை 8.30 மணிமுதல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டும் வகையில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது என யாழ் செய்தியாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில்மேற்க்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி செயல் திட்டங்கள் சம்பந்தமான அறிவூட்டலை மேற்கொள்ளும் வகையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ள வளவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை பிரித்தால், தேசிய பொலிஸ் சேவைக்கு இடமிருக்காது: வீரவன்ச கவலை
[ வெள்ளிக்கிழமை, 19 யூலை 2013, 08:30.08 AM GMT ]
13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களை வைத்திருந்தால் பெரும் சிக்கல் நிலைமை ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அதிகாரத்திற்கு கீழ் ஒன்பது பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை கொண்ட ஒன்பது பொலிஸ் துறைகள் ஒன்பது மாகாணங்களில் உருவாகிய பின்னர், பொலிஸ்மா அதிபருக்கு பொறுப்பான பொலிஸ் திணைக்களம் எங்கு இருக்க போகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
சீதாவாக்க பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது, அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
ஒன்பது பொலிஸ் துறைகள் உருவான பின்னர், பொலிஸ் மா அதிபருக்கு ஒன்பது பிரதிப் பொலிஸ் மா அதிபர்களே எஞ்சியிருப்பர். அந்த ஒன்பது பேரும் முதலமைச்சரின் கட்டளைக்கு இணங்க செயற்படுவதால், அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு பொறுப்புக் கூறேவேணடியதில்லை.

ஏனைய நாடுகளில் மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டால், தலைநகர பிரதேசத்தையாவது மத்திய அரசாங்கத்திற்கு விட்டு வைப்பார்கள். இது அப்படியல்ல தொண்டைக்கு தெரியாமல் மருந்தை கொடுக்கும் வகையில் ஏற்படு்த்தப்பட்டுள்ள முறைமை என்பதால், ஒன்பது மாகாணங்களுக்கும் பொலிஸை ஒன்பதாக பிரித்த பின்னர், தேசிய பொலிஸூக்கு இருக்க இடம் கூட இருக்காது.
பொலிஸ் தலைமையகம், மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் அனுமதியுடனே ஏற்படுத்தப்படும். மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை 13வது திருத்தச் சட்டத்தில் தொடர்ந்தும் வைத்திருந்தால், இதுபோன்ற பெரும் சிக்கல் நிலைமை ஏற்படும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten