[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 09:34.25 AM GMT ]
இந்த முகாமில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் காரணமாகவே இரு தரப்பினருக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதல் காரணமாக ஏழு பேர் தலையில் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வள்ளத்திராக் கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூஸிலாந்தில் இரண்டு இலங்கையர்களுக்கு ஆயுள் தண்டனை
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 09:13.22 AM GMT ]
நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு இலங்கையர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.
இவர்கள் தொடர்பில் கடந்த நான்கு வாரங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில் இருவரும் இன்று குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.
துவான் பிரவாஸ் மற்றும் முதியான்சலாகே விராஜ் வசந்த அலகக்கோன் ஆகிய இருவருமே குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களாவர்.
பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்தக்கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படடுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten