நாய்களை அடிக்கும் பட்டியில் ஈழத் தமிழர்களை அடைக்கும் அவுஸ்திரேலியா !
அவுஸ்திரேலியாவுக்கு இனி படகில் செல்லமுடியாது என்று அவுஸ்திரேலிய அரசு தடாலடியாகத் தெரிவித்துள்ளது. அப்படி மீறி யாராவது அவுஸ்திரேலியாவுக்குச் சென்றால், அவர்களை பப்புவா நியூகினி என்னும் தீவில் அடைத்து வைக்க அவுஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. பப்புவா நியூகினி என்பது ஒரு தனித் தீவாகும். இன் நாட்டில் "மனஸ்" என்னும் தடுப்பு முகாம் ஒன்று உள்ளது. படு கேவலமான இந்த தடுப்பு முகாமில் தான் (இனிச் செல்லும்) தமிழர்கள் அடைக்கப்படவுள்ளார்கள். இந்த "மனஸ்" தடுப்பு முகாமில், வெடிகுண்டுகளோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள், மற்றும் கொலைக் குற்றவாளிகள் என்போரே அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களோடு சேர்த்து தான் இனி இலங்கையர்களும் அடைக்கப்படவுள்ளார்கள். இந்த "மனஸ்" என்னும் தடுப்பு முகாம் நாய்களை அடைத்து வைத்திருக்க கூட லாயக்கு இல்லை என்று கூறப்படுகிறது. மிகவும் கேவலமான நாய்களை அடைத்து வைத்திருக்கும் பட்டியைப் போன்ற இடத்தில், மனிதர்களை அடைத்து வைத்திருப்பது குற்றச்செயலாகும். எனவே இதனை நடுத்துபவர்கள், கைதுசெய்யப்படலாம் என்று, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. படகுமூலமாக பல தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்வதும், பின்னர் அவர்கள் நடுக்கடலில் காணாமல் போவதும், பல காலமாக நடைபெற்று வருகிறது.
கிளிநொச்சி, மன்னார் போன்ற பிரதேசங்களில் இருந்து தமிழர்களை துரத்தியடிக்க மகிந்தரின் புத்திரன் நமால் ராஜபக்ஷ கள்ளத்தோணியில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்பி வருகிறார். இன் நிலையில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கில், சில தமிழர்களும் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் அவுஸ்திரேலிய அரசு, நாடு கடத்தி நாய்களை அடைக்கும் பட்டிக்கு சமமானதொரு தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைக்க இருக்கிறது என்பது தான் உண்மை நிலையாகும். எனவே தமிழர்கள் இனியாவது, யோசித்து செயல்படுவது நல்லது. இப்படியானதொரு ஆபாத்தான பயணம் வேண்டுமா ?
Geen opmerkingen:
Een reactie posten