[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 12:09.36 AM GMT ]
2008ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் உரையாற்றியதாக கூறி க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு இராமநாதபுரம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தனது உறவினராக இருந்தாலும் அவருடன் அரசியல் ரீதியான எந்த தொடர்புகளுமில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சீமான் நேற்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து சீமானுக்கு பிடிவிராந்து பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.
முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுடன் அரசியல் ரீதியான எந்தத் தொடர்புமில்லை: வாசுதேவ நாணயக்கார
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 01:17.18 AM GMT ]
தான் நம்புவது வர்க்க வேறுபாடுகளையே அன்றி, இன ரீதியான அடையாளங்கள் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
எனது அரசியலும், உறவு முறையும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோகும் விடயங்கள் அல்ல. நான் 15வயதில் எனது பாடசாலை பருவத்தில் அரசியலை ஆரம்பித்தேன். நான் கம்யூனிஸ்வாதி, குல பேதங்களையும் வகுப்பு வாதங்களையும் எதிர்ப்பவன். நாங்கள் வர்க்க போராட்டத்தையே நம்புகிறோம்.
இன அடையாளங்களை நாங்கள் நம்புவதில்லை. இதனால் சகல மக்களுக்கும், அவர்களின் அடையாளத்திற்கு ஏற்ப உரிமைகளை வழங்க வேண்டும்.
நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கான அரசியலையே நான் தெரிவு செய்துள்ளேன். இதனை உறவின் முறையாலோ, வேறு எந்த விதத்தினாலோ மாற்ற முடியாது என வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சீ.வீ. விக்னேஸ்வரனின் புதல்வர், வாசுதேவ நாணயக்காரவின் மகளை திருமணம் செய்துள்ளார். அவரது இளைய புதல்வரும் சிங்கள பெண்ணை மணம் முடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Geen opmerkingen:
Een reactie posten