தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juli 2013

முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்?

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழரசுக்கட்சியின் 7 ஆசனங்களில் ,திரு சி.வி.கே சிவஞானம்,குருநகர் பிரதேசத்தினை சேர்ந்த திரு ஆனோல்ட் ,எழிழனின் மனைவி ஆனந்தி, வடமராட்சியினைச்சேர்ந்த திருமதி சிவயோகம் ,தென்மராட்சியில் சட்டத்தரணி சயந்தன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றதாகவும் ஏனைய இரண்டு வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.அந்த 2 இடங்களுக்கும் பேராசிரியர் சிவச்சந்திரன், தர்சானந்த்,கனகசபாபதி, வித்தியாதரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு வழங்கப்பட்ட 4 ஆசனங்களில் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் மற்றும் சூழலியலாளர் ஐங்கரநேசன் மாதகலைச் சேர்ந்த மணியம், சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்
ரெலோவில் சிவாஜிலிங்கம், மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் களமிறங்குகின்றனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் சங்கையாவும் தலைவர் ஆனந்த சங்கரியும் களமிறங்க உத்தேசித்திருப்பதாக கூறப்படுகின்றது. தமிரசுக்கட்சியை சேர்ந்த கஜதீபன் புளொட்டிற்குரிய 2 ஆசனங்களில் ஒன்றை பெற்றுக்கொண்டு களமிறங்க உள்ளதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இம்முறை வடமாகாணத்தேர்தலில் குதிக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது
எது எப்படியிருப்பினும் முன்னதாக கிடைத்த இந்த பெயர் விபரங்களிற்கு மாறாக வேட்பாளர்கள் இறுதி நேரத்தில் மாற்றப்படக்கூடிய ஏது நிலைகளும் காணப்படுகின்றன. கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி செயலர் மாவைசேனாதிராஜாவே வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் விக்கினேஸ்வரனுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை மகாணசபையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய பலமான வேட்பாளர் அணியை உருவாக்குவதற்கான வியூகத்தினை வகுப்பதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளுர் அணி கவனம்செலுத்துவதாக தெரியவருகின்றது.
இதேவேளை முல்லைத்தீவில் இலங்கை தமிழர_க் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் புளொட்டுக்கு தலா ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 3 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு ஒரு ஆசனமும் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 3 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ரெலோ 3, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு தலா 2 ஆசனங்களும் புளொட்டுக்கு ஓர் ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் விபரம் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை
  • எனினும் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • http://www.tamilwin.com/show-RUmryHRUMUmx1.html

Geen opmerkingen:

Een reactie posten