தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

வட மாகாணசபை நாட்டைத் துண்டாடிவிடும்: ஹெல உறுமய! வட மாகாணசபைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் பதிய நாளை வரை அவகாசம்

விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: பாகிஸ்தான் இராணுவத் தளபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 11:31.25 PM GMT ]
இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தேவையான அனைத்து நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 
இலங்கையில் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு வைபவமொன்றில் கலந்து கொண்டார்.
சுமார் இரண்டரை வருடம் பயிற்சியை நிறைவு செய்த கடேற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு வைபவம் இன்று தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றது.
இதில் 64 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறுகின்றனர்.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி கலந்து கொண்டு இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போது அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பாகிஸ்தான் இராணுவத் தளபதி கயானி,
இலங்கையைப் போன்றே பாகிஸ்தானும் அமைதியை விரும்பும் ஒரு நாடு.
அந்தவகையில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தெடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை நாட்டைத் துண்டாடிவிடும்: ஹெல உறுமய! வட மாகாணசபைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் பதிய நாளை வரை அவகாசம்
[ திங்கட்கிழமை, 01 யூலை 2013, 12:29.47 AM GMT ]
வடக்கில் மாகாண சபை செயற்பட அனுமதித்தால் அது தனிநாடொன்றை உருவாக்கி, இலங்கையைத் துண்டாடிவிடும் என்று ஜாதிக ஹெல உறுமய அச்சம் தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று காலியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு மாகாண சபை கிடைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாட்டில் தமிழ் ஈழம் தான் தமது இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அவ்வாறான நிலையில் அவர்களின் கையில் மாகாண சபை அதிகாரம் கிடைத்தால் அதனைக் கொண்டு தனிநாட்டுக்கான வழியைத் தேடிக் கொள்வார்கள். அதனைத் தான் நாம் எதிர்க்கின்றோம் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மாகாண சபையை ஆதரிக்கும் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித, மாகாண சபைகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படாவிட்டால், பேரை வாவியில் மட்டும் தான் மீன்பிடிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் பதிய நாளை வரை அவகாசம்
வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்து கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் 2012ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறியவர்களும் தம்மைப் பதிவு செய்வதற்கு நாளை 2ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேன்முறையீட்டுக்கான காலம் ஜுலை 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களம் இது தொடர்பில் ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் 2012 ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதியப்படாதவர்களுமான இலங்கைப் பிரஜைகளுக்கு தமது பெயர்களை குறித்த வாக்காளர் பட்டியலில் குறைநிரப்புப் பட்டியலில் உட்சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013.06.28 ம் திகதியுடன் முடிவடைந்தது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் கருத்திலெடுக்கப்பட்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2013 ஜூலை மாதம் 02ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்படுகின்ற கால எல்லை 2013 ஜூலை மாதம் 09ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலக்கம் 10 – யாழ்ப்பாணம் மற்றும் இலக்கம் 11 – வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய குறைநிரப்புப் பட்டியல்களின் பணிகள் நிறைவு செய்யப் பெற்றுள்ளதாகவும், அப்பட்டியல்கள் அலுவலக நேரங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten