தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 juli 2013

இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தி எனது கட்சி: சரத் பொன்சேகா

கிரிக்கெட்டில் கீர்த்தியை இழக்கும் இலங்கை - ஐ.சி.சி. கூட்டத்தொடரில் பெரும் அவமானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 03:51.52 PM GMT ]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அவமானத்தை எதிர்கொண்டுள்ளது.
கடந்த ஜுன் 25ம் திகதி முதல் லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2015ம் ஆண்டு முதல் 2023ம் வரையான சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களின் அட்டவணை மற்றும் போட்டிகளை நடத்தும் இடங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் போது கிரிககெட்டில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்குக் கூட சில போட்டிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த எட்டு வருட கால கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணையில் ஒரு போட்டி கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்படவில்லை.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிறைவேற்றுக்குழுவானது, சர்வதேச மட்டத்திலான போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை பொருத்தமற்ற ஒரு நாடு என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளன. இதன் மூலம் கிரிக்கெகட் போட்டிகளை நடத்துவதன் ஊடாக இலங்கைக்கு கிடைத்து வந்த பெரும் வருமானம் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இழக்க நேரிடும் அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான வன்முறைகள், இனவெறி செயற்பாடுகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு கிரிககெட் போட்டிகள் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படாமல் தவிர்க்கப்படுவது வழக்கமாகும்.
தென்னாபிரிக்காவில் இனவெறி நிலவும் வரை அந்நாடு கிரிககெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. அது போன்று தற்போது பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது இலங்கைக்கு நேர்ந்துள்ள பெரும் அவமானமாகவே கருதப்படுகிறது.
இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தி எனது கட்சி: சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 06:50.39 PM GMT ]
இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாக தனது கட்சி வளர்ச்சியடைந்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத்பொன்சேகா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற கூட்டம் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் எந்தவொரு கட்சியும் பொதுமக்களின் நலன்கள் தொடர்பில் கரிசனை காட்டுவதில்லை.
குடும்ப அரசியலும், அதிகார வெறியும் தான் அவர்களது நோக்கமாக உள்ளது. ஆனால் ஜனநாயக தேசிய முன்னணி மட்டும் இந்த நாட்டின் அனைத்து அடிமட்ட மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதுடன், அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten