புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொண்டராசிரியர்கள் என்று சொல்லப்படும் 300 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் ஏற்பாட்டில் மிக மோசமான முறையில் எந்தவிதமான தகுதிகளும் இல்லாத, தொண்டராசிரியர்களாவே இல்லாத பலருக்கு நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்த நேர்முகத் தேர்வுகள் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டுள்ளன.
வன்னித் தொண்டராசிரியர்களுக்கு நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்த தொண்டராசிரிய நியமனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு போட்டியாக இந்த நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பலர் எந்த ஆவணங்களும் இன்றியே வருகை தந்துள்ளனர்.
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் மிக மோசமாக இவ்வாறான நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி கண்டு கொள்வதாக இல்லை.
Geen opmerkingen:
Een reactie posten