தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

சிங்களவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழில் விபரங்கள்! 2014 முதல் அமுல்

பசிலின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 24 பேர் நேற்று விடுதலை
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 07:00.43 AM GMT ]
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரையும் மன்னார் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.
ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ நாளை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் அவசர அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவர்கள் அனைவரும் நேற்று மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.
சிங்களவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழில் விபரங்கள்! 2014 முதல் அமுல்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 07:13.02 AM GMT ]
2014ம் ஆண்டு முதல் சிங்களவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ், சிங்கள ஆகிய இரண்டு மொழிகளில் பெயர் விபரங்கள் இடம்பெற செய்யப்படும் என இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.
2016 ம் ஆண்டில் இருந்து அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் சரத் குமார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், புதிதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் மாத்திரமே இரண்டு மொழிகளில் விபரங்கள் இடம்பெறச் செய்யப்படும் எனவும், 2016ம் ஆண்டு வரை இந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.
தற்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் இரண்டு மொழிகளில் விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
எவ்வாறாயினும் 2016ம் ஆண்டில் இருந்து அனைவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten