தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

இலங்கையில் இறுதியில் எஞ்சியிருக்க போவது ராஜபக்ச குடும்பம் மாத்திரமே: முஜிபுர் ரஹ்மான்

நாடளாவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுணு விஜேரத்ன எச்சரிக்கை
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 08:02.25 AM GMT ]
பஸ் கட்டணங்கள் தொடர்பில் ஒரு திடமான முடிவை அரசாங்கம் எடுக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடலாம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்தார். 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தனியார் பஸ்களின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தனியார் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்கள் ஆகியன சரியான ஒரு முடிவை எடுக்கவில்லை. எனவே பஸ் கட்டணங்கள் தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என்றார்.
இலங்கையில் இறுதியில் எஞ்சியிருக்க போவது ராஜபக்ச குடும்பம் மாத்திரமே: முஜிபுர் ரஹ்மான்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 07:39.51 AM GMT ]
இலங்கையில் இறுதியில் எஞ்சியிருக்க போவது மகிந்த ராஜபக்ச குடும்பம் மாத்திரமே என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
போர் முடிவடைந்த பின்னர் நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த காலம் முதல் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன், ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அரசாங்கம், சில அமைப்புகளை உருவாக்கி ஹலால், மாட்டிறைச்சி போன்ற பிரச்சினை ஏற்படுத்தி, இனங்களுக்கு இடையில் பகையுணர்வை தூண்டி வருகிறது.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் காரணமாக தற்போது தென்னாபிரிக்கா பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இனங்களுக்கு இடையில் நடந்து வரும் மோதல்கள் போன்று, எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம்.
இந்த நிலையில் அனைத்து மக்களும் அழிந்த பின்னர், நாட்டில் எஞ்சியிருக்க போவது மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மாத்திரமே என தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten