தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 juli 2013

சட்டவிரோத இலங்கையர்கள் பிரித்தானியாவில் கைது! - இலங்கைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!– பிரித்தானியா!!

விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:30.55 AM GMT ]
ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில் சென்றிருந்தார்.
பின்னர் அப்பகுதியில் இருக்கும் முன்னாள் போராளிகள் சிலரையும் சந்தித்து அவர் உரையாடியிருந்தார்.
அப்போது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அதில் ஈடுபட்டவர்களின் வாழ்வை திசைதிருப்பி விட்டதாகவும், இனிவரும் காலங்களில் அவ்வாறான ஒரு போராட்டம் சாத்தியமில்லை என்றும் ராம் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னரே இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள புலிகளின் மூத்த தளபதி ராம் முடிவெடுத்ததாக தெரிய வருகிறது.
தற்போது அவரும் இன்னொரு மூத்த தளபதியான நகுலனும் பொலனறுவை அண்மித்த சேனைக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத இலங்கையர்கள் பிரித்தானியாவில் கைது! - இலங்கைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!– பிரித்தானியா
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:27.24 AM GMT ]
பிரித்தானியா கென்ட், சிட்டிங்போர்ன் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், 22, 33, மற்றும் 30 வயதைக்கொண்டவர்கள் என்று கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பின்னர் குறித்த மூவரும் குடிவரவு முகாம் ஒன்றுக்கு மாற்றப்பட்டனர்.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்படுமானால், அவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட்ஸ்கள் அபராதமாக விதிக்கப்படும் என்பது நியதியாகும்.
இலங்கைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை – பிரித்தானியா
இலங்கையில் கடத்தல்கள் மற்றும் வன்முறைகளை மேற்கொள்ளும் குழுக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு எதிராக இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பில் பாலியல் வன்முறைகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
அத்துடன் தனியாக செல்லும் பெண்கள் அவதானமாக செயற்படவேண்டியுள்ளது.
திட்டமிட்ட ரீதியில் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு இவ்வாறான எச்சரிக்கையை விடுத்து ஒரு வார காலப்பகுதியில் பிரித்தானியாவும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten