தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juli 2013

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு: சோமவன்ச - பொதுநலவாய மாநாட்டினை அடுத்து அரசாங்கம் வீட்டிற்கு செல்லும்: ஐ.தே.க

குர்ஹாம் சாக்கீ கொலை தொடர்பில் மகிந்தவிடம் கேட்பேன் - சிமோன் டான்சூக்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 03:34.43 PM GMT ]
பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கேள்வி கேட்கவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று தங்காலை பிரதேச சுற்றுலா விடுதியொன்றில் சாக்கீ குர்ஹாம் என்ற பிரிட்டன் பிரஜை படுகொலை செய்ய்பட்டார். இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என ஏற்கனவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த வார இறுதியில் சிமோன் டான்சூக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.  இவ் விஜயத்தின்போது மேற்படி படுகொலை விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்று இவ்வாறு நடந்து கொள்வது சரியா என தாம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மூடிமறைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

ஆளும் கட்சி உறுப்பினர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காரணத்தினால் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சம்பவம் தொடர்பான இரண்டு பிரதான சாட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு: சோமவன்ச - பொதுநலவாய மாநாட்டினை அடுத்து அரசாங்கம் வீட்டிற்கு செல்லும்: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 03:46.53 PM GMT ]
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியின் முரண்பாட்டு நிலைமை அம்பலமாகும்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசாங்கத்தின் இரண்டு அணிகள் உருவாகியுள்ளன.
இதனால் அரசாங்கம் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டினை அடுத்து அரசாங்கம் வீட்டிற்கு செல்லும் - ஐ.தே.க
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாடு, எதிர்வரும் நவம்பர் மாதம், இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு அடுத்த மாதம் அரசாங்கத்திற்கு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆளும் கூட்டமைப்பு அரசாங்கம் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு கேலிக் கூத்தினை மேற்கொள்ளவுள்ளது.
அந்த கூத்திற்கு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்த பின்னர், மகிழ்சியாக இருக்கும் தருணத்தில், விருந்து வைத்தால் பரவாயில்லை.
ஆனால் அரச மருத்துவ மனைகளில் மருந்து இல்லை. இந்த நாட்டு கல்வித் துறைக்கும், நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கும் வரவு செலவு திட்டத்தில், நிதி ஒதுக்கப்படாத நிலையில், பொதுநலவாய மாநாட்டு கொண்டாட்டத்திற்கு பல கோடி ரூபாவினை அரசாங்கம் செலவிடுகிறது என்று அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten