[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 02:26.40 AM GMT ]
இலங்கையின் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயணிகள் விமானத்தில் நடந்துக்கொண்ட முறையால் விமான பயணிகள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர் சென் லூசியாவில் இருந்து கேட்விக்குக்கு செல்லும் போதே பிரிட்டிஸ் எயார்வேய்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
13 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேவையானக் மாற்றங்களை கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் மற்றும் அந்த தீர்மானத்தை எடுத்தமைக்கான நியாயப்பாடுகள் பற்றி இந்தியாவுக்கு தெளிவாக விளக்கமளிக்கப்படும் என்று அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
குறித்த கிரிக்கெட் வீரர், கழிவறைக்கு செல்வதாக கூறி, சென்ற போதும் பின்னர் விமானத்தின் வெளியேறும் கதவை திறக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிசியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 200 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் வீரரின் இந்த செயலை அடுத்து, ஏனைய வீரர்கள் அவரை சத்தமிட்டதுடன் அவரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தினர்.
குறித்த வீரர் மதுபோதையில் கழிவறைக்கு பதிலாகவே விமானத்தில் பயணிகள் வெளியேறும் கதவை திறக்க முற்பட்டதாக விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் குறித்த வீரரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.
13வது திருத்தத்தில் மாற்றம் குறித்து இந்தியாவுக்கு விளக்கம் அளிப்போம்! அமைச்சர் பசில் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 01:16.49 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் இருப்பதென எடுத்திருக்கும் தீர்மானம் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் இந்தியாவுக்கு விரிவாக எடுத்துரைக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக அரசிடமிருந்து அறிவிப்பு வந்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் புதுடில்லி சென்று இந்திய பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து இலங்கையின் நிலைவரம் பற்றி விளக்கமளித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடில்லி செல்லவிருக்கிறார்.
கடந்த 3 வருடங்களாக இந்தியா செல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலைமையிலேயே புதுடில்லி சென்று இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி இந்திய தலைவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
வடக்கில் வீடமைப்புத் திட்டம், மீனவர் விவகாரம், தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கும் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற விடயங்கள் பற்றி இந்த விஜயத்தின் போது ஆராயப்படும்.
அது மட்டுமல்லாது, வட மாகாண சபைத் தேர்தல், குறிப்பாக அரசியலமைப்பு திருத்தம் பற்றி ஏற்பட்டுள்ள பல்வேறு அபிப்பிராங்கள் மற்றும் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தெரிவுக்குழு நடவடிக்கைகள் பற்றியும் இந்த விஜயத்தில் புதுடில்லிக்கு விளக்கமளிக்கப்படும்.
ஏனெனில் அண்மைக்காலங்களில் பல அரசியல் கட்சிகள் இங்கிருந்து இந்தியா சென்று வந்துள்ளன. அவர்கள் அங்கு எதைச் சொல்லி வைத்தார்கள் என்று தெரியாது.
இவ்வாறான நிலைமையில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் பற்றி புதுடில்லிக்கு தெளிவான விளக்கத்தை வழங்குவதாகவே இந்த பயணம் அமைந்திருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten