[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 04:43.21 AM GMT ]
கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்று நேற்று இரவு சுற்றி வளைக்கப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொழும்பு-7, தர்மபால மாவத்த பிரதேசத்தில் இயங்கி வந்த சூதாட்ட விடுதியே சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெடிபொருட்களை புலிகள் பதுக்கி வைத்திருப்பதாக சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினரை விசாரணைகளுக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது, அவ் விடுதியை நடத்திய மூவர் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 80 பேர் என மொத்தமாக 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்,95 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மருதானை பொலிஸாரினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பில் ஆயுதங்கள் இருப்பதாக கூறிய புலி உறுப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்கு ஒப்படைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 06:23.42 AM GMT ]
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெடிபொருட்களை விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருப்பதாக சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்ட இராஜேந்திரகுமார் எனும் பெயர்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் அண்மையில் பொலிசாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்திருந்தார்.
பின்னர் அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெடிபொருட்கள், இயந்திரத்துப்பாக்கி, ரீ-56 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் 100 லட்சம் ரூபா பணம், 80 லட்சம் ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொக்லேட்டுகள் என்பன இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு பலமாக செயற்பட்ட காலத்தில் இந்த ஆயுதங்கள் கொண்டு வந்து பதுக்கப்பட்டதாகவும், அவை இன்னும் மீட்கப்படவில்லை என்றும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதுடன், இந்த இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை விசாரணைகளுக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை மூன்று நாட்களுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் நிரோஷா பெர்ணான்டோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
Geen opmerkingen:
Een reactie posten