தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

சவூதியில் அநாதரவான நிலiயில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு


இலங்கை சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 02:07.44 AM GMT ]
இந்த மாதம் இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆங்கில வர்த்தக சஞ்சிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் இதனை மறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான சுற்றுலா பிரயாணிகளின் வருகை குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டன.
எனினும் மார்ச் மாதம் ஏப்ரல் மாத முதல் பகுதிக்கான சுற்றுலா அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியை சுற்றுலாத்துறை திணைக்களம் மூடிமறைத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளால் கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறையினருக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் இதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டிருந்த பயண எச்சிரிக்கை போன்ற காரணங்களாலும் இந்த முறை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் அநாதரவான நிலiயில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 02:05.15 AM GMT ]
சவுதியில் ஜெட்டா  நகரில் அநாதரவான நிலையில் இருந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்களுக்காக இலங்கையில் இருந்து சென்ற சுமார் 6000 பணியாளர்கள் தங்களின் தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சவுதியில் அநாதரவாக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புக்கள் கிட்டவில்லை.
இந்த நிலையில் அவர்கள் ஜெட்டா நகரில் உள்ள சேர்பியா பாலத்துக்கு அடியில் ஒன்று கூடி வசித்து வந்தனர்.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் அவர்களுக்க பொது மன்னிப்பு வழங்கி, விரைவில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சவுதி அரேபிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten