தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

ஜனாதிபதியை யாரும் திட்டுவதில்லை!- பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி


கருணா அம்மானுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி பறிபோனது?
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 02:42.35 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கருணா அம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்ததிலிருந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அதன்போது அவருக்கு ஜனாதிபதி அவர்களினால் கட்சியின் உபதலைவர்கள் இருவரில் ஒருவராக நியமனம் வழங்கி அவரை கட்சியின் உயர் பீட உறுப்பினராக செயற்படுத்தி வந்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றதன் பின்பு கட்சியின் உள்ளார்ந்த ரீதியாக பல மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதில் பிரதான ஒரு அங்கமாக ஸ்ரீலஙகா சுதந்திரக் கட்சியன் உபதலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் அப்பதவியினை தற்போது பதவி வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கத்திட்டம் தீட்டியுள்ளதாகவும் மேற்படி கட்சியின் உயர் பீடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாதிபதியை யாரும் திட்டுவதில்லை!- பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 03:03.05 PM GMT ]
இலங்கையின் தற்போதைய மின்வலு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, முன்னாள் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் தங்களுக்கிடையே மாறி மாறித் திட்டுகின்ற போதிலும் ஜனாதிபதியை எவரும் திட்டுவதில்லை என பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே தினமன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மே தினச் செய்தியில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டுமென கூறி நற்பெயரை ஈட்டுவார்.
மத்தல விமான நிலையம் பற்றி விளரம்பரங்கள் ஒளி, ஒலிபரப்பச் செய்யப்படுகின்றன. மக்கள் பணத்தைக் கொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது அநாவசியமானது.
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மக்களுக்கு எதனையும் தெரிவிக்க வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten