தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

கனடா மட்டுமே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கும்!- அவுஸ்திரேலியா


இலங்கைக் கடற் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உதவி
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 03:16.13 AM GMT ]
இலங்கையின் கடல் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எக்மோ என்னும் அமெரிக்க கடற்பாதுகாப்பு திட்ட பயிற்சியை இரண்டாவது தடவையாகவும் அமெரிக்கா இலங்கையில் வழங்குகிறது.
இதன் படி அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மூன்று பேரும், இலங்கையின் கடற்பாதுகாப்பு காவற்துறையில் இருந்து 10 பேரும் கடற்படையில் இருந்து 4 பேரும் இந்த பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பின் பாதுகாப்பினை விஸ்தீரிப்பதுடன் சட்டவிரோத செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று, கொழும்பில் உள்ள
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே செசோன் தெரிவித்துள்ளார்.
கனடா மட்டுமே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கும்!- அவுஸ்திரேலியா
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 03:14.34 AM GMT ]
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இறுதியில் கனடா மாத்திரமே புறக்கணிக்கும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவ நாடுகளை புறக்கணிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவை பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்துகின்ற போதும், அவுஸ்திரேலியா அதனை புறக்கணிக்காது என்று பொப்கார் அறிவித்திருந்தார்.
எனினும் இந்த முறையில் இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் தாம் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கனடா மாத்திரமே இறுதியில் இந்த மாநாட்டை புறக்கணிக்கும் என்றும் ஏனைய நாடுகள் அனைத்தும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten