தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

வடமாகாண தேர்தலுக்கு முன்னர் காணி, காவற்துறை அதிகாரங்களை ரத்துச் செய்ய அரசு தயாராகிறது?


எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை ரத்துச் செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அறியகிடைத்துள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று வடக்கில் அனைத்து அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வட மாகாணத்தின் ஆட்சியை பிடிப்பதற்காக கூட்டமைப்பு தற்போது மேற்குலக நாடுகள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten