வடக்கில் உள்ள இராணுவம் நடத்தும் கொடூர அடக்குமுறைகள் மூலமான அரசியலும், அடாவடித்தனமும் முடிவுக்கு கொண்டுவர ஜக்கிய தேசியக் கட்சி முன்வர வேண்டும் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன், ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராணுவத்தின் அடக்கு முறைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தின் கண்காணிப்புக்கு ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடாத்த முடியும் என்றும் அவர் எதிர்கட்சித் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
வடமாகாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள எதிர்;கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள நேற்று காலை யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமாக சுரேஸ் பிரேமசசந்தின் மற்றும் வலி.கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் உதயகுமார் ஆயியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின்போதே எம்.பி சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு எடுத்துக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்.
மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டுவரப்படும் இந்நிலையில் தமிழ் மக்களுடைய இன்றைய தேவை அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவது ஒன்றுதான். எனவே தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தினை ஜக்கிய தேசியக் கட்சி வலியுறுத்த வேண்டும்.
யாழிலும் சரி வன்னி மாவட்டங்களிலும் சரி இராணுவத்தினருடைய கொடூர ஆட்சியே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக வன்னி மாவட்டத்தில் சுமார் 12 டிவிசன் (பிரிவு) இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
இராணுவம் தற்போது இராணுவத்திற்கு ஏற்ற வேலைகளை பார்ப்பது இல்லை. தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் கொண்டு வருவதும், அரசியல் நடத்துவதும், பிரச்சாரங்களை முன்னெடுப்பதும், தமக்கு தேவையாக தேர்தல் வேட்பாளர்களைத் தேடிப்பிடிப்பதும், அரசாங்கத்தினை விமர்சிப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அடிப்பது, உதைப்பது, கல்லெறிவது போன்ற செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அரசியல் சக்தியாகவும், அரசியலைக் கொண்டு நடாத்துகின்ற சக்தியாகவுமே இராணுவம் வடக்கில் செயற்பட்டு வருகின்றது. இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் நீதியானதும் நியாயமானதுமாக வடமாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அவ்வாறு வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமானால் சர்வதேசத்தின் கண்காணிப்பு இங்கு முழுமையாக இருக்க வேண்டும்.
அக் கண்காணிப்பு தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதங்களின் முன்னரில் இருந்தே வடக்கில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு ஒரு மாதகாலத்திற்குள் சர்வதேச கண்காணிப்பு இங்கு வந்தால் மட்டுமே அரச கட்சிகளைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமது அரசில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மேலும் எடுத்துக் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten