தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

யாழ். உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழர் நிலங்களைப் பார்வையிடச் சென்ற ஐ.தே.கவினரை திருப்பியனுப்பிய இராணுவம்!


மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளரின் நடவடிக்கைகளால் மீனவர் அமைப்புகள் கவலை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 03:48.10 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு உரிய மீன்பிடி வளங்களை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் நடவடிக்கையில் மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக வாவிப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீன்பிடியாளர்களின் வலைகளை சட்டவிரோத நடவடிக்கையென கூறி குறித்த பணிப்பாளரால் அள்ளிச்செல்லப்படுவதாகவும், ஆனால் முஸ்லிம் மீன்பிடியாளர்கள் மீன்பிடிக்கும்போது அவர் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லையெனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக ஏறாவூர், நொச்சிமுனை, பாலமீன்மடு, நாவற்குடா ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும் அதிகளவான வளங்கள் முஸ்லிம் பிரதேச மீனவர்களுக்கே வழங்கப்படுவதாகவும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செயற்பட்டுவருவதாகவும் மீனவர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த கால யுத்த நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தொழில்புரியும்போது அவர்களுக்கு எதுவித ஊக்கத்தினையும் வழங்காமல் அவர்களை மீன்பிடியில் இருந்து ஒதுங்கச்செய்யும் வகையிலேயே குறித்த பணிப்பாளர் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகரை பிரதேச மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட 16க்கும் அதிகமான நவீன மீன்பிடி படகுகள் மற்றும் குளிராக்கி என்பனவற்றை இப்பிரதேச அரசியல்வாதியொருவர் தனது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திவருவதாகவும் மீன்பிடி சங்கங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மீன்பிடி படகுகள் பணிப்பாளர் ஜோர்ஜ் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் மீனவர் சங்க பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
அனைத்து வகையிலும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டிய அதிகாரியின் இவ்வாறான செயற்பாடுகள் கவலையளிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

யாழ். உயர்பாதுகாப்பு வலயத்தில் தமிழர் நிலங்களைப் பார்வையிடச் சென்ற ஐ.தே.கவினரை திருப்பியனுப்பிய இராணுவம்
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013, 04:10.11 PM GMT ]
வலி. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் மக்களுடைய நிலங்களை பார்வையிடச் சென்றிருந்த ஐ.தே.கட்சியினரை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் எவரும் உள்ளே நுழையமுடியாதெனவும் கூறியிருக்கின்றனர்.
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கும் ஐ.தே.கட்சியினர் இன்று மாலை 5 மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஆக்கிரமிக்கப்படும் நிலத்தை பார்வையிடச் சென்றிருந்தனர்.
எனினும் இதனை முற்கூட்டியே அறிந்திருந்த படையினர், மாவட்டபுரம் பகுதியிலுள்ள உயர்பாதுகாப்பு வலயத்தின் தொடக்கத்தில் பெருமளவு படையினரை குவித்து வைத்திருந்தனர்.
மேலும் ஐ.தே.கட்சியின் பயணித்த வாகனத்தை வழி மறித்து உள்ளே செல்ல முடியாதெனவும் அதற்கு யார் அனுமதியளித்தார்கள் எனவும் கேள்வியெழுப்பியதுடன், பாதுகாப்பு அமைச்சின் அ னுமதியில்லாமல் யாருக்கும் உள்ளே செல்வதற்கான அனுமதியில்லை என கூறி திரும்பிச் செல்லுமாறும் பணித்தனர்.
எனினும் மக்களுடைய நிலம் ஆக்கிரமிக்கப்டுவதை தாம் பார்க்கப் போவதாக கூறியபோதும், விடாப்பிடியாக நின்ற படையினர் அதற்கு தமக்கு அனுமதியில்லை எனவும் நீங்கள் அதனை பார்ப்பதற்கான தேவையில்லை எனவும் உறுதிபட கூறிவிட்டனர்.
இதனால் அங்கு சென்றிருந்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், உடனடியாகவே அங்கிருந்து திரும்பிவிட்டனர்.
இவர்கள் திரும்புவதை பார்த்துக் கொண்டிருந்த படையினர் பெருமெடுப்பில் பலமாக சிரித்துக் கொண்டு நின்றதை அங்கு காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை நேற்று யாழ்.சட்டத்தரணிகள் இதேபோன்று மக்களுடைய நிலம் சுவீகரிக்கப்படுவதை பார்வையிடச் சென்றபோது அவர்களும் படையினரால் திருப்பியனுப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten